அரசு மகளிர் கல்லூரி, அனந்த்நாக்

மகளிர் கல்லூரி, அனந்த்நாக் என்பது இந்திய நிர்வாகத்தின் கீழ் சம்மு-காசுமீரில் உள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும். 1979 ஆம் ஆண்டில் அனந்த்நாக் நகரின் மையத்தில் இடைநிலைக் கல்லூரியாக நிறுவப்பட்ட இக்கல்லூரி காசுமீர் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.[1]

அரசு மகளிர் கல்லூரி, அனந்த்நாக்
வகைஇளங்கலை மகளிர் கல்லூரி
உருவாக்கம்1979; 45 ஆண்டுகளுக்கு முன்னர் (1979)
சார்புகாசுமீர் பல்கலைக்கழகம்
முதல்வர்பேராசிரியர் தில்ருபா ஹம்தானி
அமைவிடம், ,
192101
,
33°43′48″N 75°09′00″E / 33.7300°N 75.1500°E / 33.7300; 75.1500
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்கல்லூரி இணையதளம்
அரசு மகளிர் கல்லூரி, அனந்த்நாக் is located in ஜம்மு காஷ்மீர்
அரசு மகளிர் கல்லூரி, அனந்த்நாக்
Location in ஜம்மு காஷ்மீர்
அரசு மகளிர் கல்லூரி, அனந்த்நாக் is located in இந்தியா
அரசு மகளிர் கல்லூரி, அனந்த்நாக்
அரசு மகளிர் கல்லூரி, அனந்த்நாக் (இந்தியா)

தெற்கு காசுமீரில் முதல் மகளிர் கல்லூரியாக நிறுவப்பட்ட இக்கல்லூரி, அந்தப் பகுதியிலுள்ள மகளிர் தரமான உயர்கல்வியை எளிதாக அணுக வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்துடன் இளங்கலைப் படிப்புடன் கருத்தரங்குகள், விவாதங்கள், வினாடி வினாக்கள், பேச்சுக்கள், மாநாடுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் போன்ற நிகழ்வுகளையும் நடத்திவருகிறது.

படிப்புகள் தொகு

இக்கல்லூரியில் கலை, அறிவியல் முதல் மனிதநேயம் வரை பல்வேறு இளங்கலைப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இக்கல்லூரியால் வழங்கப்படும் இளங்கலை படிப்புகளின் பட்டியல் பின்வருமாறு, [2].

  • வணிக இளங்கலை (BCOM)
  • கணினி பயன்பாட்டு இளங்கலை (BCA)
  • மருத்துவ அறிவியலில் இளங்கலை (பி. எஸ். சி.)
  • மருத்துவம் அல்லாத அறிவியலில் இளங்கலை (பி. எஸ். சி.)
  • இளங்கலை கலை (பி. ஏ.)

துறைகள் தொகு

  • கணினி அறிவியல் துறை
  • உள்துறை அறிவியல் துறை
  • தாவரவியல் துறை
  • விலங்கியல் துறை
  • இயற்பியல் துறை
  • வேதியியல் துறை
  • வர்த்தகத் துறை
  • பட்டுப்புழு வளர்ப்புத் துறை
  • கல்வித் துறை
  • பொருளாதாரத் துறை
  • வரலாற்றுத் துறை
  • அரசியல் அறிவியல் துறை
  • சுற்றுலா மற்றும் பயணம்
  • பாரசீகத் துறை
  • இந்தி துறை
  • உருது துறை
  • கணிதத் துறை
  • ஆங்கிலத் துறை

மேற்கோள்கள் தொகு

  1. "காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பின் கீழ் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள்".
  2. "Admission | GDC Anantnag". பார்க்கப்பட்ட நாள் 2020-10-03.