அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர்

அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர் (Government Medical College, Ariyalur) என்பது தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 2021-2022 கல்வி ஆண்டு முதல் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி ஆகும்.

அரசு மருத்துவக் கல்லூரி
நிறுவப்பட்டது07/07/2020
வகைஅரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை
துறை முதல்வர்மரு. அ.முத்துகிருஷ்ணன்
மாணவர்கள்150
அமைவுஅரியலூர், தமிழ் நாடு, இந்தியா
இணைப்புகள்தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்

அரியலூரில் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைத்திட, 2020ஆம் ஆண்டு சூலை மாதம் 7ஆம் தேதி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் துவங்கியது. மத்திய அரசு தனது பங்களிப்பாக 60 சதவிகித நிதியையும், மாநில அரசு 40 சதவிகித நிதியையும் செலவிட்டுள்ளது. [1]

சுமார் 26 ஏக்கர் பரப்பில் 347 கோடி செலவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. இதன் பணிகள் முடிவடைந்தை அடுத்து இக்கல்லூரிக்கு தேசிய மருத்துவ ஆணையம் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில் சனவரி 12, 2022 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி காணொலி காட்சிமூலம் இக்கல்லூரியினைத் திறந்து வைத்தார்.[2] நடப்பு கல்வியாண்டு முதல் இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது. ஆண்டு ஒன்றிற்கு 150 மாணவர் வீதம் சேர்த்துக்கொள்ளப்படுவர்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.maalaimalar.com/news/district/2020/07/07111827/1682216/CM-laid-foundation-stone-for-Ariyalur-Government-Medical.vpf |அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்
  2. "அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி இன்று திறப்பு: நீண்டகால கோரிக்கை நிறைவேறுவதால் மக்கள் மகிழ்ச்சி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-01-12.
  3. "அரசு மருத்துவ கல்லூரியில் 150 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி". Dailythanthi.com. 2021-11-12. பார்க்கப்பட்ட நாள் 2022-01-12.

மேலும் காண்க

தொகு