அரசு மேல்நிலைப் பள்ளி, அரிமளம்

அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தின் அரிமழத்தில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளியாகும்.[1]

பள்ளி வரலாறு

தொகு

பள்ளிக்கான அடிக்கல் 23.1.1941 அன்று நாட்டப்பட்டு 23.4.1942 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. அப்போது புதுக்கோட்டையின் திவானாக இருந்த அலெக்சாண்டர் டோட்டன்ஹாம் என்ற ஆங்கிலேயரால் திறந்து வைக்கப்பட்டது. இப்பள்ளியில் இந்தியா விடுதலை பெற்ற இருபத்தைந்தாம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி நிறுவப்பட்ட நினைவுக்கல் உள்ளது.

நிர்வாகம்

தொகு

இப்பள்ளி தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படுகிறது. மாவட்ட அளவில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இப்பள்ளியின் நிர்வாகத்தைக் கவனிக்கிறார்.

நலத்திட்டங்கள்

தொகு

சீருடை, காலணிகள், புத்தகப்பை, பாடநூல்கள், நோட்டுப்புத்தகங்கள், பேருந்து பயண அட்டை போன்ற அனைத்து தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் பெற்று மாணவ, மாணவியா் ஆா்வமுடன் கல்வி கற்று வருகின்றனா்[2][3]

மேற்கோள்கள்

தொகு