அலெக்சாண்டர் டோட்டன்ஹாம்

பிரித்தானிய குடிமைப்பணி அதிகாரி

சர் அலெக்சாண்டர் ராபர்ட் லோஃப்டஸ் டோட்டன்ஹாம் சி.ஐ.இ (31 சூலை 1873 - 13 திசம்பர் 1946) என்பவர் பிரித்தானிய அரசின் ஒரு ஊழியர் மற்றும் நிர்வாகி ஆவார், இவர் 1934 முதல் 1946 வரை புதுக்கோட்டை அரசின் திவானாக பணியாற்றினார்.

சர்
அலெக்சாண்டர் ராபர்ட் லோஃப்டஸ் டோட்டன்ஹாம்
புதுக்கோட்டை திவான்
பதவியில்
1934–1946
ஆட்சியாளர்ராஜகோபால தொண்டைமான்
முன்னையவர்பி. ஜி. ஹோல்ட்வொர்த்
பின்னவர்சி. பி. கருணாகர மேனன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1873-07-31)31 சூலை 1873
இறப்பு13 திசம்பர் 1946(1946-12-13) (அகவை 73)
பிரித்தானிய இந்தியா, புதுக்கோட்டை
வேலைகுடிமைப் பணியாளர்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

அலெக்சாண்டர் டோட்டன்ஹாம் பிரித்தானிய கடற்படை அதிகாரி ஜான் பிரான்சிஸ் டோட்டன்ஹாம் மற்றும் அவரது மனைவி லாரா எலன் டோட் ஜான்வெரின் ஆகியோருக்கு மகனாக 1873 சூலை 31 இல் பிறந்தார். [1] அலெக்சாண்டர் பிரிஸ்டலின் கிளிப்டன் கல்லூரியில் பட்டம் பெற்றார் மேலும் ஆக்ஸ்போர்டின் குயின்ஸ் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தொழில் தொகு

அலெக்சாண்டர் 1896 இந்தியக் குடிமைப் பணி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று 1897 திசம்பர் 5 ஆம் இந்தியா வந்தார் [2] அங்கு இவர் சென்னை மாகாண மாவட்ட ஆட்சியர் மற்றும் உதவி குற்றவியல் நடுவராக பணியாற்றினார். 1923 முதல் 1932 வரை, இவர் இந்தியாவின் நடுவண் வருவாய் வாரிய உறுப்பினராக இருந்தார். [3] அலெக்சாண்டர் தனது அறுபது வயதில் 1933 இல் இந்திய குடிமைப் பணியிலுருந்து ஓய்வு பெற்றார்.

புதுக்கோட்டை தொகு

1934 ஆம் ஆண்டில், டோட்டன்ஹாம் புதுக்கோட்டையின் திவானாக நியமிக்கப்பட்டார். மேலும் இவர் 1946 இல் இறக்கும் வரை இந்தப் பணியில் இருந்தார். டோட்டன்ஹாம் புதுக்கோட்டையின் சிறந்த நிர்வாகிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் கலை மற்றும் தொழில்துறையை மேம்படுத்தியவராவார். [4] அலெக்சாண்டர் டோட்டன்ஹாமின் உருவப்படம் திருக்கோகர்ணம் அரசு அருங்காட்சியகத்தில் மாட்டபட்டுள்ளது. [5]

குறிப்புகள் தொகு

  1. Burke's Peerage, Baronetage & Knightage. 1. U.S.A.. பக். 1325. 
  2. The India office and Burma office list. London: Harrison and Sons. 1903. பக். 549. 
  3. The Men Who Ruled India. Jonathan Cape. 1954. https://archive.org/details/guardiansmenwhor0000unse. 
  4. Menon, Vapal Pangunni (1961). The story of the integration of the Indian States. Orient Longman. பக். 293. https://archive.org/details/dli.bengal.10689.12887. 
  5. Chandrasekhar, M. S. (1996). Guide to the principal exhibits in the Government Museum, Pudukkottai. Director of Stationery and Print. பக். 73. 

சுயசரிதை தொகு

  • Sir Alexander Tottenham. N. Ramachandran. 1992.