பி. ஜி. ஹோல்ட்வொர்த்

இந்திய குடிமைப்பணி அதிகாரி

பெஞ்சமின் ஜார்ஜ் ஹோல்ட்வொர்த் சி.ஐ.இ (Benjamin George Holdsworth, 31 சூலை 1892 - 24 பெப்ரவரி 1943) என்பவர் இந்திய அரசு ஊழியர் மற்றும் நிர்வாகி ஆவார். இவர் 1931 முதல் 1933 வரை புதுக்கோட்டை அரசின் திவானாக பணியாற்றினார்.

பெஞ்சமின் ஜார்ஜ் ஹோல்ட்வொர்த்
புதுக்கோட்டை திவான்
பதவியில்
1931–1934
ஆட்சியாளர்ராஜகோபால தொண்டைமான்
முன்னையவர்டி. இராகவய்யா
பின்னவர்அலெக்சாண்டர் டோட்டன்ஹாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1892-07-31)31 சூலை 1892
இறப்பு24 சூலை 1949(1949-07-24) (அகவை 56)
வேலைகுடிமைப்பணி அதிகாரி

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

ஹோல்ட்ஸ்வொர்த் 1892 சூலை 31 அன்று ரெவ். ஜே. ஃபாரெஸ்டர் ஹோல்ட்வொர்த்திற்கு மகனாக பிறந்தார். பிரிஸ்டல் கிராமர் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டில் உள்ள பிரேசனோஸ் கல்லூரியில் கல்வி பயின்ற இவர் 1919 இல் இந்தியக் குடிமைப் பணியில் நுழைந்தார்.

முதல் உலகப் போரின் போது, ஹோல்ட்வொர்த் மெசொப்பொத்தேமியா மற்றும் பாலஸ்தீனத்தில் 1/155 முன்னோடிகளுடன் பணியாற்றினார்.

இந்தியாவில் தொகு

1920 முதல் 1927 வரை ஹோல்ட்ஸ்வொர்த் தஞ்சை, கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்டங்களில் தீர்வு அதிகாரியாக பணியாற்றினார். 1927 முதல் 1930 வரை சென்னை மாகாண வருவாய் வாரிய செயலாளராகவும், முதல் இந்திய வட்ட மேசை மாநாட்டில் இணை செயலாளராகவும் இருந்தார்.

புதுக்கோட்டை தொகு

1913 நவம்பரில், ஹோல்ட்வொர்த் புதுக்கோட்டையின் திவானாக நியமிக்கப்பட்டார் [1] இவர் 1931 முதல் 1934 வரை இப்பணியில் பணியாற்றினார். புதுக்கோட்டையில் ஹோல்ட்ஸ்வொர்த் அணையை உருவாக்கும் பொறுப்பில் ஹோல்ட்ஸ்வொர்த் ஈடுபட்டார். [2] சமஸ்தானத்தில் இருந்த ஹோல்ட்வொர்த் பூங்காவானது ஹோல்ட்ஸ்வொர்த் நினைவாக இடப்பட்டது. [3]

ஹோல்ட்ஸ்வொர்த் 1934 இல் விடுக்கபட்டார். அவருக்குப் பின் அலெக்சாண்டர் டோட்டன்ஹாம் பதவி ஏற்றார். ஹோல்ட்ஸ்வொர்த்தை, புதுக்கோட்டை சமஸ்தான மக்கள் திவானாகப் பெறுவதற்கு அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று குறிப்பிட்டார். [4]

பிற்கால வாழ்க்கை மற்றும் கௌரவங்கள் தொகு

1942 ஆம் ஆண்டில், ஹோல்ட்ஸ்வொர்த் இந்திய உணவுத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டு இறக்கும் வரை பணியாற்றினார். ஹோல்ட்ஸ்வொர்த் 1943 பெப்ரவரி 24 இல் தனது ஐம்பத்தொன்றாவது வயதில் பல் தொற்றுநோயால் ஏற்பட்ட சிக்கல்களின் தொடர்ச்சியால் இறந்தார்; போர் காரணமாக பொருட்கள் மடைமாற்றபட்டதால் பென்சிலின் பற்றாக்குறை ஏற்பட்டது. இவர் புதுதில்லியில் அடக்கம் செய்யப்பட்டார்.

1941 ஆம் ஆண்டில், ஹோல்ட்ஸ்வொர்த் இந்திய சாம்ராஜ்யத்தின் ஒழுங்கின் தோழராக அறிவிக்கபட்டார் . [5]

குடும்பம் தொகு

ஹோல்ட்ஸ்வொர்த் நான்கு குழந்தைகளில் மூத்தவர். இவரது இரண்டு தம்பிகளான ஜோசப் மற்றும் வெஸ்லி இருவரும் முதல் உலகப் போரில் கொல்லப்பட்டனர். இவருக்கு எடித் என்ற சகோதரி இருந்தார்.

1920 ஆம் ஆண்டில், ஹோல்ட்வொர்த் பால்டிமோர் ஜேம்ஸ் ஹில்லின் மகள் எலன் மேவை மணந்தார். இந்த தம்பதியரின் மகனான, பீட்டர், பிரித்தானிய இராணுவத்தில் பிரிகேடியர் பதவிக்கு உயர்ந்தார். இவர்களுக்கு பமீலா என்ற மகளும் உண்டு.

குறிப்புகள் தொகு

  1. Madras District Gazetteers: Pudukkottai. Superintendent, Govt. Press. 1983. பக். 509. 
  2. Manual of the Pudukkóttai State. Director of Museums, Govt. of Tamil Nadu. 2002. பக். 239. 
  3. Manual of the Pudukkóttai State. Director of Museums, Govt. of Tamil Nadu. 2002. பக். 310. 
  4. Nagarajan, Krishnaswami (1992). Sir Alexander Tottenham. N. Ramachandran. பக். 59. 
  5. "Supplement to the London Gazette". 1 January 1941. p. 7. http://www.london-gazette.co.uk/issues/35029/supplements/7/page.pdf. 

குறிப்புகள் தொகு

  • Who was who: a companion to Who's who : containing the biographies of those who died during the period. A & C Black. 1967. பக். 553. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஜி._ஹோல்ட்வொர்த்&oldid=3057878" இலிருந்து மீள்விக்கப்பட்டது