அரப்பாவா தீவு

அரப்பாவா தீவு (Arapawa Island) என்பது நியூசிலாந்தின் மார்ல்பரோ ஆழ்நீரிணைகளில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். இது தெற்குத் தீவின் வடகிழக்கு முனையில் உள்ளது. இதன் நிலப்பகுதி 240 சதுரகிமீ (92.7 சதுரமைல்) பரப்பளவைக் கொண்டது. இதன் மேற்கே குயீன் சார்லட் ஆழ்நீரிணையும் (Queen Charlotte Sound), தெற்கே வடக்குத் தீவில் உள்ள வெலிங்டன் நகரையும் பிக்டன் நகரையும் இணைக்கும் கடல்வழிப் பாதையான டோரி கால்வாயும் அமைந்துள்ளன.

அரப்பாவா தீவு
அரப்பாவா தீவின் தெற்கு முனை
புவியியல்
அமைவிடம்மார்ல்பரோ ஆழ்நீரிணைகள்
ஆள்கூறுகள்41°11′S 174°19′E / 41.183°S 174.317°E / -41.183; 174.317
பரப்பளவு75 km2 (29 sq mi)
நீளம்28 km (17.4 mi)
அகலம்4 km (2.5 mi)
உயர்ந்த ஏற்றம்559.4 m (1,835.3 ft)
உயர்ந்த புள்ளிநராவியா
நிர்வாகம்
நியூசிலாந்து
மக்கள்
மக்கள்தொகை50

வரலாறு தொகு

அரப்பாவா தீவின் குன்றொன்றில் இருந்தே 1770 ஆம் ஆண்டில் பிரித்தானிய மாலுமி ஜேம்ஸ் குக் முதன் முதலில் பசிபிக் பெருங்கடலையும் தாசுமான் கடலையும் இணைக்கும் கடல்வழிப் பாதையைக் கண்டார். இப்பாதைக்கு பின்னர் குக் நீரிணை எனப் பெயரிடப்பட்டது. 1970 இல் இங்கு குக்கின் கண்காணிப்பு என்ற நினைவிடம் அமைக்கப்பட்டது.

1820களின் இறுதியில் இருந்து 1960களின் நடுப்பகுதி வரை இத்தீவு இங்குள்ள ஆழ்நீரிணைகளில் இடம்பெறும் திமிங்கில வேட்டைக்கான தளமாக இருந்தது.[1]

வானூர்தி விபத்து தொகு

டோரி கால்வாய் மீது அமைக்கப்பட்ட அரப்பாவா தீவையும் பெருந்தரைப் பகுதியையும் இணைக்கும் மின்கம்பிகள் மீது ஏர் அல்பாட்ரோசு பயணிகள் வானூர்தி ஒன்று 1985 ஆம் ஆண்டில் மோதியது. இவ்விபத்தை குக் நீரிணையால் பயணித்த பயணிகள் கப்பல் ஒன்றில் இருந்த பல பயணிகள் கண்டனர். கப்பலில் இருந்து உடனடியாக உயிர்காப்புப் படகு ஒன்று விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பப்பட்டது. இரண்டு விமானிகள், மற்றும் இரு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர், மற்றும் ஒருவர் உயிரிழந்தனர். சின்டி மோசி என்ற இளம் பெண் மட்டுமே உயிர் தப்பினார்.[2]

சுற்றுச்சூழல் தொகு

அரப்பாவா தீவின் பல பகுதிகளில் மரம் வெட்டல், மற்றும் எரிப்பு போன்றவற்றினால் உள்நாட்டுப் பயிரினங்கள் அழிந்து போயின. பெருமளவு பைன் மரங்கள் பயிரிடப்பட்டன.[3] உள்நாட்டுப் பயிரினங்களின் வளர்ச்சிக்காக காட்டு ஊசியிலை மரங்கள் நஞ்சூட்டப்பட்டன.[4]

அரப்பாவா தீவுக்கே உரித்தான சில பன்றி, வளர்ப்புச் செம்மறியாடு மற்றும் ஆடு வகைகள் இத்தீவில் காணப்படுகின்றன. இவை எங்கிருந்து இத்தீவிற்கு வந்ததென்பது அறியப்படவில்லை. ஆரம்பகால திமிங்கில வேட்டைக்காரர்கள், அல்லது நாடுகாண் பயணிகள் இவற்றை இங்கிலாந்தில் இருந்து கொண்டு வந்திருக்கலாம் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. இவ்வகை உயிரினங்கள் இங்கிலாந்தில் அழிந்து போய் விட்டன. இங்குள்ள சரணாலயங்களில் உள்ள உள்நாட்டு ஆடுகள் தற்போது நியூசிலாந்தின் ஏனைய பாகங்களிலும் வளர்க்கப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. Perano Homestead
  2. "Mosey-Grayson Memorial". Archived from the original on 2014-02-11. பார்க்கப்பட்ட நாள் 6 சூலை 2014.
  3. Meurk, C. D; Ward J.C.; Jane G.; Walls G.Y. (1999). "Arapawa Island: flora and ecological notes". Canterbury Botanical Society (33): 77–98. http://bts.nzpcn.org.nz/bts_pdf/Cant_1999_33__77-98.pdf. 
  4. Nicoll, Jared (22 சூன் 2012). "Tree poisoning work for island". The Marlborough Express. http://www.stuff.co.nz/marlborough-express/news/6962568/Tree-poisoning-work-for-island. பார்த்த நாள்: 24 பெப்ரவரி 2013. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரப்பாவா_தீவு&oldid=3541583" இலிருந்து மீள்விக்கப்பட்டது