அரவிந்த் குப்தா

அரவிந்து குமார் குப்தா (பிறப்பு:04 டிசம்பர் 1953)[1] பொம்மை-உருவாக்குபவர், என்று அனைவராலும் அறியப்படும் எழுத்தாளர், பொறியாளர், அறிவியலாளர்.[2] இவர் துவக்கியுள்ள அரவிந்து குப்தா பொம்மைகள் (http://arvindguptatoys.com/) என்ற வலைத்தளம் பள்ளி அளவிலான அடிப்படை-அறிவியல் பரிசோதனைகளை எளிய, அதிக செலவில்லாத பொருள்களைக் கொண்டு செய்யும் முறைகளை செவ்வனே விளக்குகிறது. மேலும் இவர் உலகின் மிகச்சிறந்த கல்வியாளர்கள், அறிவியலாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆகியோரின் படைப்புகளை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மராத்தியிலும் மொழிபெயர்த்து இலவசமாக வெளியிடுகின்றார்.[3]

அரவிந்த் குப்தா
பிறப்பு5 திசம்பர் 1345, 4 திசம்பர் 1953 (அகவை 678)
படித்த இடங்கள்இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர், St. Xavier's School, Delhi
பணிஅறிவியலாளர், குழந்தைகளின் எழுத்தாளர்
அறிவியல் வாழ்க்கைப் போக்கு

படிப்பு, முன் அனுபவம்

தொகு

1970-ஆம் ஆண்டு கான்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் மின் பொறியியல் பிரிவில் பி.டெக். பட்டப்படிப்பில் சேர்ந்தார். அப்போது பி.டெக். படிப்பு ஐந்தாண்டு காலப் படிப்பாக இருந்தது.[4] பி.டெக். படித்துள்ள அரவிந்த், பூனாவிலுள்ள டெல்கோ நிறுவனத்தில் சில காலம் வேலை செய்தார். பின்னர் அங்கு ஒரு வருட படிப்பு-விடுப்பு எடுத்துக்கொண்டு வெளியேறிய அரவிந்த், லோரி பேக்கர், அனில் சடகோபால் ஆகியோருடன் வேலை செய்து விட்டு பின்னர் குழந்தைகளுடன் இயங்குவது, குழந்தைகளுக்கு அறிவியல் கற்பிப்பது இவற்றையே தன் முழு-நேரத் தொழிலாக ஆக்கிக் கொண்டார்.[4]

குப்பைப்பொருள்களிலிருந்து அறிவியல் மாதிரிகள்

தொகு

அரவிந்து குப்தா எழுதியுள்ள நூல்கள்

தொகு

ஏக்லவ்யா வெளியீடு

தொகு
1 கேல்-கேல் மேன் (இந்தி)
2 லிட்டில் சயன்சு / கபத் சே ஜுகத் (ஆங்கிலம் / இந்தி)
3 த டாய் பேக் / கிலோனோன் கா பாஸ்தா (ஆங்கிலம் / இந்தி)
4 டாய் டிரஷர்சு / கிலோனோன் கா காசானா (ஆங்கிலம் / இந்தி)
5 ஆஹா! ஆக்டிவிடீசு (ஆங்கிலம்)
6 ஆப்னே ஹாத் விக்யான் (இந்தி)
7 குச் குச் பனானா (இந்தி)

பெற்றுள்ள விருதுகள்

தொகு

குப்தாவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள்

தொகு

பீஷ்ம சாஹ்னி, பேகம் அக்தர், அனில் அகர்வால், அனில் சடகோபால், லவுரி பேக்கர், யேன் மிர்டில் ஆகியோர் தன் வாழ்வில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதாக அரவிந்த் குப்தா கூறியுள்ளார்.[7]

தற்போதுள்ள இடம்

தொகு

பூனாவிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கான வானியல், வானியற்பியல் மையத்தில் (Inter University Centre for Astronomy and Astrophysics - IUCAA) வருகை-புரியும் ஆசிரியராக, அறிவியல் பொம்மைகள் செய்யும் வேலையிலும் அறிவியல் நூல்களை எழுதுவதிலும் ஈடுபட்டுள்ளார்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. வித்யா ஆன்லைன் [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "லேர்னிங் நெட்". Archived from the original on 2009-01-13. பார்க்கப்பட்ட நாள் 2009-10-14.
  3. "A Million Books for a Billion People"
  4. 4.0 4.1 "எக்சுபிரசு இந்தியா". Archived from the original on 2010-06-13. பார்க்கப்பட்ட நாள் 2009-10-16.
  5. "நாயகம்-வேர்டுபிரசு". Archived from the original on 2010-02-13. பார்க்கப்பட்ட நாள் 2009-10-14.
  6. கான்பூர் இந்திய தொழில்நுட்பக்கழகத்தின் பழைய மாணவர் குழு
  7. "எக்சுபிரசு இந்தியா". Archived from the original on 2010-06-13. பார்க்கப்பட்ட நாள் 2009-10-16.
  8. "ஐயூக்கா வலைத்தளம்". Archived from the original on 2009-11-06. பார்க்கப்பட்ட நாள் 2009-10-14. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவிந்த்_குப்தா&oldid=4007511" இலிருந்து மீள்விக்கப்பட்டது