அரிசந்த் தாகூர்

அரிசந்த் தாகூர் (Harichand Thakur) (வங்காள மொழி: হরিচাঁদ ঠাকুর) (11 மார்ச் 1812 – 5 மார்ச் 1878), பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட நாமசூத்திரர் இந்து சமய மக்களின் சமூகத் தகுதியை மேம்படுத்தும் நோக்கில் இந்து சமயத்தின் வைணவத்தை அடிப்படையாகக் கொண்ட மாத்துவ மகாசங்கத்தை நிறுவினார்.[1]

வாழ்க்கை தொகு

வைணவ்க் குடும்பத்தில் 1812-ஆம் ஆண்டில் அரிசந்த் தாகூர் [2] தற்போதைய வங்காளதேசத்தின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஓரகண்டி எனும் ஊரில் தாகூர் சமூகத்தில் பிறந்தார்.[3]

ஆத்ம தர்சனம் பெற்ற அரிசந்த் தாகூர் தன்னை, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக, பகவான் விஷ்ணுவின் அவதாரமாக அவதரித்தாக உணர்ந்து கொண்டார். [4]

அரிசந்த் தாகூர் இந்து சமயத்தின் வைணவ தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு மாத்துவ மகாசங்கம் எனும் அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பில் வங்காள மாகாணத்தில் வாழ்ந்த தீண்டக்கதகாத மற்றும் ஒடுக்கப்பட்ட நாமசூத்திரர்கள் எனும் சமூகத்தினர் சேர்ந்தனர்.[2][5] மாத்துவ மகாசங்கம் இந்து சமூகத்தில் சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்ததுடன், ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது. இதனால் பிற ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும் அரிசந்த் தாகூர் நிறுவிய மாத்துவ மகாசங்கத்தில் இணைந்தனர். [6]

அரிசந்த் தாகூரைப் பின்பற்றும் சமூகத்தினர் அவரை கடவுளாகவே பார்த்தனர். [7][8]அரிசந்த் தாகூர் - ஜெகத் மாதா சாந்தி தேவி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். தாகூர் 1878-இல் பரித்பூர் மாவட்டத்தில் மறைந்தார்.

மரபுரிமைப் பேறு தொகு

அரிசந்த் தாகூரின் மறைவிற்குப் பின்னர், அவரது மகன்களில் ஒருவரான குருசந்த் தாகூர், ஒடுக்கப்பட்ட நாமசூத்திரர் மக்களின் கல்வி வளர்ச்சிக்காக பல கல்வி நிறுவனங்களை நிறுவினார்.[9][10]வரலாற்று ஆசிரியர் சேகர் பன்தோபாத்தியாவின் கூற்றுபடி, குருசந்த் தலைமையிலான நாமசூத்திரர்களின் மாத்துவ மகாசங்கம், 1872-இல் சாதிய எதிர்ப்பு இயக்கத்துடன் தொடர்புடையது என்பதால், அதன் கோட்பாட்டு ஒத்திசைவு மற்றும் நிறுவனம் உந்துதலை அடைந்தது.[3]இந்து சமயக் கருத்துகள் கலந்த சாதிய வேறுபாடுகளை நீக்கும் தாகூர், தலித் இலக்கியங்களைப் படைத்ததுடன், நாமசூத்திரர் சமூகத்தில் மாத்துவ பூசாரிகளையும் உருவாக்கினார். [6]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Eye on Bengal votes, PM Modi to visit Matua mandir in Bangladesh". The Times of India. 14 March 2021. https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/west-bengal/eye-on-bengal-votes-pm-modi-to-visit-matua-mandir-in-bangladesh/articleshow/81488676.cms. 
  2. 2.0 2.1 Sarkar, Sumit (1997). "Renaissance and Kaliyuga: Time, Myth, and History in Colonial Bengal". in Sider, Gerald M.; Smith, Gavin A.. Between History and Histories: The Making of Silences and Commemorations. University of Toronto Press. பக். 115. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-80207-883-4. https://books.google.com/books?id=Jje8cSPgTtQC&pg=PA115. 
  3. 3.0 3.1 Bandyopadhyay, Sekhar (2004). Caste, Culture and Hegemony: Social Dominance in Colonial Bengal. SAGE. பக். 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-76199-849-5. https://books.google.com/books?id=z2SVIflbyHQC&pg=PA96. 
  4. Bandyopadhyay, Sekhar (1995). "The Matua Sect and the Namasudras". in Rajat Kanta Ray. Mind Body and Society: Life and Mentality in Colonial Bengal. Oxford University Press. பக். 163. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:019-563757-7. 
  5. Sinharay, Praskanva (2015). "Building Up the Harichand-Guruchand Movement: The Politics of the Matua Mahansgha". in Chandra, Uday; Heierstad, Geir; Nielsen, Kenneth Bo. The Politics of Caste in West Bengal. Routledge. பக். 152. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-31741-477-3. https://books.google.com/books?id=7qXbCgAAQBAJ&pg=PA152. 
  6. 6.0 6.1 Mukherjee, Sipra (2015). "Creating Their Own Gods: Literature from the Margins of Bengal". in Abraham, Joshil K.; Misrahi-Barak, Judith. Dalit Literatures in India. Routledge. பக். 132, 140. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-31740-880-2. https://books.google.com/books?id=Ph4-CgAAQBAJ&pg=PA132. 
  7. Sinharay, Praskanva (2015). "Building Up the Harichand-Guruchand Movement: The Politics of the Matua Mahansgha". in Chandra, Uday; Heierstad, Geir; Nielsen, Kenneth Bo. The Politics of Caste in West Bengal. Routledge. பக். 159. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-31741-477-3. https://books.google.com/books?id=7qXbCgAAQBAJ&pg=PA159. 
  8. Bandyopadhyay, Sekhar (1995). "The Matua Sect and the Namasudras". in Rajat Kanta Ray. Mind Body and Society: Life and Mentality in Colonial Bengal. Oxford University Press. பக். 173. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:019-563757-7. "Harichand, as many of the devotional songs of the sect indicate, was believed to have been the incarnation of Hari [Vishnu] or Krishna." 
  9. "Orakandi's pilgrim Prime Minister of India: Look London see Paris? | AK (...) - Mainstream". mainstreamweekly.net. பார்க்கப்பட்ட நாள் 2021-04-10.
  10. Biswas, Ratan Kumar (2010). Namasudra Movements In Bengal (1872-1947). Progressive Book Forum. பக். 158–160. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-88006-19-9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிசந்த்_தாகூர்&oldid=3134251" இலிருந்து மீள்விக்கப்பட்டது