அரிச்சந்திராபுரம்

கிராமம் (திருவள்ளூர்)

அரிச்சந்திராபுரம் (Harichandirapuram) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்துக்கு, உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

அரிச்சந்திராபுரம்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
631 210

மக்கள் வகைப்பாடு

தொகு

இவ்வூர் மாவட்டத் தலைநகரான திருவள்ளூரில் இருந்து மேற்கே 20 கி.மீ. தொலைவிலும், திருவாலங்காட்டில் இருந்து 12 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 62 கி.மீ. தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1394 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 5811 பேர் ஆவர். இதில் ஆண்கள் 2,966 பேரும் பெண்கள் 2,845 பேரும் உள்ளடங்குவர்.[1] மக்களின் கல்வியறிவு விகிதமானது 71.4% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[2] இந்த ஊரில் உள்ள மக்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் இசுலாமியர்கள் ஆவர். இந்த இசுலாமிய மக்களின் முதன்மைத் தொழில் ஊர் ஊராக சென்று கத்தி போன்றவற்றிற்கு சாணை பிடித்தல் ஆகும்.[3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிச்சந்திராபுரம்&oldid=3746177" இலிருந்து மீள்விக்கப்பட்டது