அரிஜித் சிங்
அரிஜித் சிங் என்பவர் இந்தியப் பாடகர் ஆவார்.[1] பிரீத்தம் என்னும் இசையமைப்பாளருக்கு உதவியாளராகப் பணிபுரிந்தார்[2]. இவர் இந்தி மற்றும் வங்காள மொழிப் பாடல்களைப் பாடியுள்ளார்.[3]இந்தி சினிமா வரலாற்றில் வெற்றிகரமான பாடகர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.[4]
அரிஜித் சிங் | |
---|---|
பிறப்பு | 25 ஏப்ரல் 1987 முர்சிடாபாத் , மேற்கு வங்காளம், இந்தியா |
இருப்பிடம் | மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | சிறிபத் சிங் கல்லூரி |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2007 - தற்சமயம் வரை |
வாழ்க்கைத் துணை | காயல் ராய் (தி. 2014) [6] |
பிள்ளைகள் | 2 |
இவர் பல பாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். பேம் குருகுல் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, பிரபலமடைந்து பாடகரானார். சில திரை நிகழ்ச்சிகளுக்கான பாடல்களையும் பாடி, புகழடைந்தார். 2013இல் வெளியான ஆஷிக் 2 என்ற திரைப்படத்தில் தும் ஹி கோ என்ற பாடலைப் பாடினார். இது பெருத்த புகழைச் சேர்த்து, பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுத் தந்தது.
ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும்
தொகு1987 ஆண்டு ஏப்ரல் 25 மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத்தில் பிறந்தார்.[7] இவரது தந்தை ஜியாகஞ்சில் கக்கர் பஞ்சாபி சீக்கியரும், தாய் பெங்காலியரும் ஆவார்.[8] இவர் மிகச் சிறிய வயதில் வீட்டில் இசை பயிற்சியை தொடங்கினார். தாய்வழி அத்தையிடம் இந்திய பாரம்பரிய இசை பயின்றார். ராஜா பிஜய் சிங் உயர்நிலைப் பள்ளியிலும், சிறிபத் சிங் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[9] ராஜேந்திர பிரசாத் ஹசாரியிடம் தொழில் ரீதியாக இந்திய பாரம்பரிய இசை கற்றார். மேலும் பாப் இசை மற்றும் ரவீந்திர சங்கீத்( ரவீந்திரநாத் தாகூர் எழுதி இசையமைத்த பாடல்கள்) என்பவற்றை திரேந்திர பிரசாத் ஹசாரியிடம் கற்றார்.[9] மூன்று வயதில் இருந்து ஹசாரி சகோதரர்களிடம் பயிற்சியை தொடங்கினார். ஒன்பது வயதில், இந்திய பாரம்பரிய இசையில் குரல் பயிற்சி பெறுவதற்காக அரசாங்க உதவித்தொகை பெற்றார்.[10]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகு2014 ஆம் ஆண்டில் அவரது தோழியான கோயல் ராயை திருமணம் புரிந்தார்.[11] அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அரிஜித் சிங் தற்போது மும்பையில் அந்தேரியில் வசிக்கின்றார்.[12]
பணி
தொகுஅரிஜித் சிங்கின் குரு ராஜேந்திர பிரசாத் ஹசாரியின் வலியுறுத்தலினால் 2005 ஆம் ஆண்டு நடைப்பெற்ற பேம் குருகல் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஆறாவது இடத்தை பிடித்தார்.[13] நிகழ்ச்சியின் போது திரைப்படத் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி திறமையை அடையாளம் கண்டு அவரது சவாரியா திரைப்படத்தில் பாடலொன்றை பாடுவதற்கு வாய்ப்பு வழங்கினார் இருப்பினும் திரைக்கதையில் ஏற்பட்ட மாறுதலினால் அந்ந பாடல் வெளிவரவில்லை.[14] குமார் தவராணியின் இசைத் தொகுப்பொன்றில் கையெழுத்திட்டார் அதுவும் வெளியாகவில்லை.[15]
அரிஜித் சிங் மற்றுமொரு ரியாலிட்டி நிகழ்ச்சியான 10 கே 10 லு கயே தில் பங்கேற்று வெற்றி பெற்றார்.[16] நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பரிசுத்தொகை 10 இலட்ச ரூபாயை முதலீடு செய்து சொந்தமாக குரல்பதிவு ஸ்டூடியோ ஒன்றை தொடங்கினார்.[17] விளம்பரங்கள், செய்தி சேனல்கள் மற்றும் வானொலி நிலையங்களுக்கு இசை மற்றும் பாடல்களை தயாரிக்க தொடங்கினார். பிற இசையமைப்பாளர்களுடன் பணி புரிய தொடங்கினார்.[18]பல திரைப்படங்களில் பின்னணி பாடகராக பணி புரிந்துள்ளார். 2015 ஆம் ஆண்டில புகழ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.[19]
விருதுகள்
தொகுஅரிஜித் சிங்கிற்கு சிறந்த நேரடி நடிகருக்கான விஸ்கிராப்ட் ஹானர் விருதி வழங்கப்பட்டது.[1] 2016 ஆம் ஆண்டின் வெம்ப்லியின் தி எஸ்எஸ்இ அரங்கில் இடம்பெற்ற எஸ்எஸ்இ லைவ் விருதுகளில் உலகம் முழுவதிலுமிருந்து சிறந்த 10 கலைஞர்களில் ஒருவராக இருந்தார்.[20] இவர் நான்கு மிர்ச்சி இசை விருதுகள், ஐந்து பிலிம்பேர் விருதுகள், ஒரு ஸ்டார்ஸ்ட் விருது, ஒரு ஐபா விருது, இரண்டு ஜீ சினி விருதுகள் மற்றும் இரண்டு திரை விருதுகளை பெற்றுள்ளார். 2013 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆசிகி 2 திரைப்படத்தின் தும் ஹி ஹோ பாடலுக்காக பத்து பரிந்துரைகளில் ஒன்பது விருதுகளை வென்றார்.[21] 2014 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தின் தேசிய இந்திய மாணவர் சங்கம் ஐகான் - இசை விருதை வழங்கியது.[22] 2016 ஆம் ஆண்டில் போர்ப்ஸ் இந்தியா சஞ்சிகையின் 100 பிரபலங்களின் பட்டியலில் 15 ஆவது இடத்தை பெற்றார்.[23]
பாடல்கள்
தொகு- 2007 - ஆல் பார் ஒன் - ஹை ஸ்கூல் மியூசிக்கல் 2
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Bajirao Mastani scores five awards, Arijit adjudged Best Live Performer at GiMA 2016". www.radioandmusic.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
- ↑ "Arijit to sing in Spyro Gyra's next album - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
- ↑ "Fast 5 with Aditi Singh Sharma | The Asian Age". web.archive.org. 2015-01-05. Archived from the original on 2015-01-05. பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "The Voice Speaks for Itself : Arijit Singh". The Sunday Guardian Live (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-11-11. பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
- ↑ "Arijit turns Music Producer". Archived from the original on 13 பெப்பிரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 12 பெப்பிரவரி 2017.
- ↑ Sen, Zinia; Ganguly, Ruman (24 சனவரி 2014). "Arijit Singh gets married again?". The Times of India. Archived from the original on 7 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 24 பெப்பிரவரி 2015.
- ↑ "Happy Birthday Arijit Singh: From Tum Hi Ho to Gerua, his Top 10 songs". The Indian Express (in Indian English). 2016-04-25. பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
- ↑ Ghosh, Sankhayan (2018-04-25). "Arijit Singh Is Everywhere, And Nowhere". Film Companion (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
- ↑ 9.0 9.1 ""I still travel by public transport: Arijit Singh"".
- ↑ "My life has always been a mess". web.archive.org. 2017-04-21. Archived from the original on 2017-04-21. பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Can't stop the music". filmfare.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
- ↑ "Arijit Singh: Hitting the Right Notes - Indian Express". archive.indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
- ↑ "Complete List of Arijit Singh Songs Romantic & Sad Songs List". web.archive.org. 2017-07-02. Archived from the original on 2017-07-02. பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "'If you take away music from me, I'll die' - The Hindu". archive.is. 2017-07-09. Archived from the original on 2017-07-09. பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "TIPS signs young heartthrobs of 'Fame Gurukul' - bollywood news : glamsham.com". web.archive.org. 2017-06-27. Archived from the original on 2017-06-27. பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "A loser of a reality show is now India's No.1 singing sensation - Unknown facts about Arijit Singh and reality shows! - Bollywoodlife.com". web.archive.org. 2017-07-02. Archived from the original on 2017-07-02. பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ ""The rise and rise of Arijit Singh"". Archived from the original on 2017-07-08.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ SpotboyE. "VIDEO: I Had To Sing The Same Song 5 Times To Get The Right Feel". www.spotboye.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
- ↑ "Arijit Singh makes his Tamil debut with 'Pugazh'". The Indian Express (in Indian English). 2015-01-03. பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
- ↑ "Kapil Sharma, Armaan Malik, Arijit Singh: The only three Indians in Wembley's top 10". Hindustan Times (in ஆங்கிலம்). 2017-02-19. பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
- ↑ "IIFA 2014: Complete list of winners". The Indian Express (in Indian English). 2014-04-27. பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
- ↑ Releases, Press (2014-09-12). "National Indian Students Union UK awards Arijit Singh with the Youth Icon Award 2014". BollySpice.com - The latest movies, interviews in Bollywood (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
- ↑ "Arijit Singh - Forbes India Magazine". Forbes India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
வெளி இணைப்புகள்
தொகு- Arijit Singh at the Bollywood Hungama