அரிமதி தென்னகன்

அரிமதி தென்னகன்[1] (Arimathi Thennagan, மார்ச் 12, 1934 – செப்டம்பர் 12, 2017)[2] புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மூத்த தமிழ் புலவர்களில் ஒருவரும், எழுத்தாளரும் ஆவார்.

புலவர்

அரிமதி தென்னகன்
Arimathi Thennagan
பிறப்புநாமதேவன்
12 மார்ச் 1934
இறப்பு12 செப்டம்பர் 2017(2017-09-12) (அகவை 83)
புதுச்சேரி, இந்தியா
தேசியம்தமிழர்
குடியுரிமைஇந்தியர்
கல்வி நிலையம்சிறீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரி

தொடக்க வாழ்க்கை

தொகு

இவர் இயற்பெயர் நாமதேவன் ஆகும்.

கல்வி

தொகு

இவர் தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக, மயிலம் மடம் தமிழ் வித்துவான் கல்லூரியில் (தற்போது சிறீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரி) முறையாக தமிழ் படித்து வித்துவான் பட்டம் பெற்று, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலுள்ள குஷால் சந்த் பள்ளியில் தமிழ் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

ஆசிரியப்பணி

தொகு

1960-ஆம் ஆண்டில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பாகூர் பாரதி அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 34 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றித் தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்றார்.

இலக்கியப்பணி

தொகு

தென்னகன், 200க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தார்.

முன்னாள் தமிழ்நாட்டு முதலமைச்சர்களான "பேரறிஞர்" கா. ந. அண்ணாதுரை, "கலைஞர்" மு. கருணாநிதி போன்றவர்களுடன் இலக்கியத் தொடர்பில் இருந்தார்.

நூல்கள்

தொகு

நாவல்

தொகு
  • கமலப் பூவே... கன்னி நிலவே![3]

பிற நூல்கள்

தொகு
  • பாரதியின் புதிய கீதை[4]
  • வசந்தா தமிழ் அகராதி[5]

கவிதை

தொகு
  • ஆனந்தரங்கன் பிள்ளைத் தமிழ்[6]
  • ஐந்திணை வெண்பா ஐம்பது
  • கலைஞர் மும்மணிக் கோவை
  • முகில் விடு தூது
  • அரிமதி அந்தாதி

பெற்ற விருதுகள்

தொகு
  • சிறந்த குழந்தைகள் இலக்கிய படைப்பிற்காக, மத்திய அரசின் நேரு இலக்கிய விருது.
  • தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் விருது.
  • புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறையின் சிறந்த தமிழறிஞருக்கான முதல் தமிழ்மாமணி விருது.
  • புதுச்சேரி அரசின் கம்பன் புகழ் இலக்கிய விருது மற்றும் நேரு இலக்கிய விருது

மறைவு

தொகு

12 செப்டம்பர் 2017 அன்று, தம்முடைய 84-ஆம் அகவையில் புதுச்சேரியில் காலமானார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. தென்னகன், அரிமதி. "அரிமதி தென்னகன் காலமானார்". தினமணி. தினமணி. பார்க்கப்பட்ட நாள் 23 December 2018.
  2. "புதுவை எழுத்தாளர் அரிமதி தென்னகன்". தினமலர். தினமலர்.
  3. "கமலப் பூவே கன்னி நிலவே", Goodreads (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2024-06-13
  4. பாரதியின் புதிய கீதை: ஆய்வு நோக்கில் புதிய ஆத்திசூடி, பிரியா நிலையம், 2002, பார்க்கப்பட்ட நாள் 2024-06-13
  5. ValaiTamil, "Vasantha , வசந்தா Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", ValaiTamil, பார்க்கப்பட்ட நாள் 2024-06-13
  6. "ஆனந்தரங்கம் பற்றிய தனிப் பாடல்கள்". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2016/Apr/09/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-1310723.html. பார்த்த நாள்: 13 June 2024. 
  7. "அரிமதி தென்னகன் காலமானார்". தினமலர். https://www.dinamalar.com/news/puducherry/news/1854180. பார்த்த நாள்: 13 June 2024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிமதி_தென்னகன்&oldid=4007334" இலிருந்து மீள்விக்கப்பட்டது