அரியபங்கா ஆறு

இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் ஓர் ஆறு

அரியபங்கா ஆறு (Hariabhanga River) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் சுந்தரவனக் காடுகளைச் சுற்றி பாய்கின்ற ஓர் அலை முகத்துவார ஆறாகும். அரிபங்கா ஆறு என்ற பெயராலும் இந்த ஆறு அறியப்படுகிறது. வங்காளதேசத்தின் 64 மாவட்டங்களில் ஒன்றான சத்கீரா மாவட்டத்தின் எல்லையில் அரியபங்கா ஆறு பாய்கிறது.

அரியபங்கா நதி
Hariabhanga River
அமைவு
நாடுகள்இந்தியா
வங்காளதேசம்
மாநிலம்மேற்கு வங்காளம், இந்தியா
மாவட்டம்சத்கீரா,வங்காளதேசம்
சிறப்புக்கூறுகள்
வெளியேற்றம் 
 ⁃ அமைவுவங்காள விரிகுடா

இச்சாமதி ஆறு இங்கல்கஞ் பகுதிக்கு கீழே பல துணையாறுகளாகப் பிரிகிறது. இராய்மங்கல், பித்யா, இயில்லா, காளிந்தி மற்றும் இயமுனா ஆகியவை இவற்றில் முதன்மையானவைகளாகும்.[1] இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையிலான பன்னாட்டு எல்லையை அரியபங்கா ஆறு பின்பற்றுகிறது. நியூ மூர் தீவு அரியபங்கா ஆற்றின் முகப்பில் அமைந்துள்ளது.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Mandal, Asim Kumar (2003). The Sundarbans of India: a development analysis. Indus Publishing. p. 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8173871436. பார்க்கப்பட்ட நாள் 2009-11-18.
  2. Baby, Sultana Nasrin (2012). "Kalindi-Jamuna River". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  3. Banerjee, Anuradha (1998). Environment, population, and human settlements of Sundarban Delta. Concept Publishing Company. p. 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8170227397. பார்க்கப்பட்ட நாள் 2009-11-14.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியபங்கா_ஆறு&oldid=3882315" இலிருந்து மீள்விக்கப்பட்டது