அரியாலை முத்து விநாயகர் கோவில்

ஸ்ரீ முத்துவிநாயகர் கோவில் அரியாலை கிழக்கு வீதிக்கு வடக்காக கிழக்கு அரியாலையில் சுமார் 300 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் 30 ஜனவரி 2012 இல் நடைபெற்றது. இவ்வாலயத்தில் ஒவ்வொருநாளும் மூன்று நேரப்பூசை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உள்வீதி மண்டபத்தில் 24 தூண்கள் போடப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 48 தூண்களாக ஆலயம் விரிவாக்கப்பட உள்ளது. இவ்வாயத்துக்குச் சொந்தமாக வயற்காணிகளும் தென்னம் தோப்புக்களும் உள்ளது. ஆலய பரிபாலன சபை 11 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. 3 வருடங்களுக்கு ஒருமுறை நிருவாக சபை தெரிவுசெய்யப்படுகிறது.

ஸ்ரீ முத்து விநாயகர் கோவில்
ஸ்ரீ முத்து விநாயகர் கோவில் is located in இலங்கை
ஸ்ரீ முத்து விநாயகர் கோவில்
ஸ்ரீ முத்து விநாயகர் கோவில்
தேசப்படத்தில் ஸ்ரீ முத்து விநாயகர் கோவில்
ஆள்கூறுகள்:9°37′17.09″N 80°6′33.6″E / 9.6214139°N 80.109333°E / 9.6214139; 80.109333
பெயர்
பெயர்:ஸ்ரீ முத்து விநாயகர் கோவில்
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:வடமாகாணம்
மாவட்டம்:யாழ்ப்பாணம்
அமைவு:அரியாலை கிழக்கு வீதி, கிழக்கு அரியாலை
கோயில் தகவல்கள்
மூலவர்:பிள்ளையார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்:18ஆம் நூற்றாண்டு
இணையதளம்:https://www.facebook.com/muththuvinayagar

இவ் வாலயம் இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தில் 02 ஏப்ரல் 2012 அன்று HA/5/JA/1438 இலக்கத்திற் பதிவுசெய்யப்பட்டது.