அரி நாயர்

திரைப்பட ஒளிப்பதிவாளர்

அரி நாயர் என்பவர் ஒரு இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் மலையாள, வங்க, ஆங்கில, இந்தி போன்ற திரைப்படத் துறைகளில் பணியாற்றியவர். அரி இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரியில் (FTII) பட்டம் பெற்றார். [1] இவர் 7996 மார்ச் 30, அன்று கேரளத்தின், மலப்புரத்தில் பிறந்தார். இவரது தந்தை கே. பி. ராஜகோபாலன் நாயர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரியில் ஒளிப்படம் எடுத்தல் துறையின் தலைவராக இருந்தார். [2]

அரி நாயர்
பிறப்புஇந்திய ஒன்றியம், கேரளம், மலப்புறம்
படித்த கல்வி நிறுவனங்கள்திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி
பணிஒளிப்பதிவாளர்

தொழில் தொகு

இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரியில் பட்டம் பெற்ற அரி, இந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் உறுப்பினராகவும், பல்வேறு இந்திய மொழிகளில் பல பணிகளை செய்துள்ளார்.

ஷாம்ஸ் விஷன் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டது, இவர் கேரள மாநில விருதை ஸ்வாஹாம் (1994) படத்திற்காக பெற்றார், இரண்டாவதாக என்னு ஸ்வந்தம் ஜனகிக்குட்டி (1997) என்ற படத்திற்காக பெற்றார். [3]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரி_நாயர்&oldid=3174382" இலிருந்து மீள்விக்கப்பட்டது