அரி ரங்க பிள்ளை
அரி ரங்க கோவிந்தசாமி பிள்ளை (Ariranga Govindasamy Pillay) (பிறப்பு:1945 சூன் 14) இவர் மொரிசியசின் தலைமை நீதிபதியாக 1996 முதல் 2007 வரை பணியிலிருந்தார். ஒய்.கே.ஜே. இயியுங் சிக் யுவான் என்பவருக்குப் பின்னர் பதவிக்கு வந்தார்.[1]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகு1966 முதல் 1969 வரை இலண்டன் பொருளியல் பள்ளியில் பொருளாதாரத்தையும், அரசியல் அறிவியலையும் பயின்று பட்டம் பெற்றார். அதன் பிறகு ஆக்சுபோர்டில் உள்ள மேர்டன் கல்லூரியில் சட்டம் பயின்றார். 1971 இல் நீதித்துறை துறையில் கலையில் இளங்கலை பட்டம் பெற்ற இவர், 1972 இல் இலண்டனின் லிங்கன் விடுதியில் வழக்கறிஞராகச் சேர்ந்தார். மொரிசியசுக்குத் திரும்பியதும் இவர் சட்டம் பயிசி மேற்கொண்டார். 1987 வரை மொரிசியசிலுள்ள தலைமை சட்ட அறிஞர் அலுவலகத்திலும், நீதி அமைச்சகத்தின் சட்ட ஆலோசகராக பணியாற்றினார். சட்ட அலுவலகத்திலும், நீதி அமைச்சகத்திலும் முதன்மை ஆலோசகர், உதவி சட்ட அறிஞராகவும், நாடாளுமன்ற ஆலோசகராகவும் இவர் பல பதவிகளை வகித்தார்.[2]
இவர் நீதிபதியாகவும் பின்னர் 1987 முதல் 1996 வரை மொரிசிய உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். 1996 மே 1 அன்று மொரிசியசின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2007 சூன் 13 அன்று ஓய்வு பெற்றார்.
இவர் மொரிசியசின் நீதி, சட்ட சேவை ஆணையத்தின் தலைவராக உள்ளார். 1997 முதல் பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.[3] அத்துடன் ஜனநாய, மனித உரிமைகள் ஆய்வுகளுக்கான ஆப்பிரிக்க மையத்தின் ஆளும் குழுவின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "New Chief Justice Appointed". Government of Mauritius. 14 June 2007. Archived from the original on 14 November 2010. பார்க்கப்பட்ட நாள் 31 October 2010.
- ↑ "Ariranga G. Pillay - Chairperson of the Commission". Competition Commission of Mauritius. Archived from the original on 28 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 28 September 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "[Diaporama] Rejet de sa candidature: l'ex-chef juge Ariranga Pillay accuse le ministre Sinatambou d'ingérence". Le Defi Media Group (in பிரெஞ்சு). பார்க்கப்பட்ட நாள் 2019-10-23.