அருகிய இன உயிரினங்களின் பாதுகாப்புக்கான ஆய்வகம்

லாகோன்சு (LaCONES-Laboratory for the Conservation of Endangered Species) அல்லது அருகிய இன உயிரினங்களின் பாதுகாப்புக்கான ஆய்வகம் என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் ஐதராபாத்தில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் ஆராய்ச்சி கூடம் ஆகும். இது லால்ஜி சிங் என்பவரால் கருத்துருவாக்கம் செய்யப்பட்டு நிறுவப்பட்டது.[1] வனவிலங்குகள் மற்றும் அதன் வளங்களைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் ஒரே ஆராய்ச்சி வசதி இதுவாகும்.[2] இது 1998ஆம் ஆண்டு மத்திய விலங்கு காட்சியக ஆணையம், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் மற்றும் ஆந்திரப் பிரதேச அரசின் உதவியுடன் நிறுவப்பட்டது. இதனை 2007ஆம் ஆண்டு அப்போதைய இந்தியக் குடியரசுத்தலைவர் ஆ. பெ. ஜெ. அப்துல் கலாம் அவர்களால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் ஒரு பகுதியாகும். வனவிலங்கு பாதுகாப்புக்கான இந்தியாவின் முதல் மரபணு வங்கியானது (தேசிய வனவிலங்கு மரபணு வள வங்கி) லாகோன்களில் அரசாங்கத்தால் நிறுவப்பட்டது.[3]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "LaCONES :: Laboratory for the Conservation of Endangered Species".
  2. "Dr Harsh Vardhan dedicates India's only lab for conservation of endangered species". pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-06-12.
  3. "LaCONES :: Laboratory for the Conservation of Endangered Species". e-portal.ccmb.res.in. பார்க்கப்பட்ட நாள் 2022-06-12.