அருட்பா மருட்பா

அருட்பா மருட்பா என்பது 18 ஆம் நூற்றாண்டிலும், 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியிலும் தமிழ்ச் சமூகத்தில் நிகழ்ந்த ஒரு மெய்யியல், சமயக் கருத்துப் போராட்டத்தையும், அதனோடு தொடர்புடைய ஒரு வழக்கையும் குறிக்கிறது. சாதியத்தையும், பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத் தாழ்வினையையும் கடுமையாக எதிர்த்தவர் வள்ளலார். சைவ, சாதிய மரபுகளை வலியுறுத்தியவர் ஆறுமுக நாவலர். வள்ளலார் பாடிய பாடல்கள் அருட்பா என்று இதர சைவ படைப்புகளோடு கருதப்படத்தக்கவை அல்ல என்று ஆறுமுக நாவலரும் அவர் சார்பு சுக்கிரவார சங்கமும் கட்டனப் பரப்புரை செய்தனர். இது தொடர்பாக ஒரு வழக்கும் தமிழ்நாட்டில் பதிவுசெய்யப்பட்டது.

இசுலாமியத் தமிழறிஞர் செய்குத்தம்பி பாவலர் வள்ளலாருக்கு ஆதரவாக சொற்பொழிவுகள் ஆற்றினார்.

ஈழம் தமிழக கருத்துப்பரிமாற்றம்தொகு

இலங்கைத் தமிழ்ச் சமூகத்துக்கும், தமிழகத்தினருக்கும் வரலாற்று நெடுக இருந்த ஒரு மொழிச், சிந்தனை, மெய்யியல், சமய பரிமாற்றத்தின் ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக அருட்பா மருட்பா நிகழ்வுகள் சுட்டி நிற்கின்றன.

நூல்தொகு

இக் காலப்பகுதியில் நிகழ்ந்த விவாதங்களை ஆய்ந்து ஆவணப்படுத்தி அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு என்ற ஒரு விரிவான நூல் வெளிவந்துள்ளது.[1]

மேற்கோள்கள்தொகு

  1. பெ. பாலசுப்ரமணியன் (அக்டோபர் 2010). "காலச்சுவடு". காலச்சுவடு (129): 73. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருட்பா_மருட்பா&oldid=1844666" இருந்து மீள்விக்கப்பட்டது