அருணிமா சின்கா
அருணிமா சின்கா (Arunima Sinha, பிறப்பு-1988) என்பவர் இடது கால் துண்டிக்கப்பட்ட நிலையில் எவரெசுடு மலை முகட்டை ஏறித் தொட்ட முதல் பெண்மணியும் இந்தியரும் ஆவார்[1][2][3]. இவர் தொடக்கத்தில் கைப்பந்து விளையாட்டில் சிறந்தவராக இருந்தார்.
அருணிமா சின்கா | |
---|---|
அருணிமா சின்கா 2014-ல் | |
பிறப்பு | 20 சூலை 1989 கடிபூர் சுல்தான்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
பணி |
|
வாழ்க்கைத் துணை | கவுரவ் சிங் |
விருதுகள் |
|
வரலாறு
தொகுஉத்தரப் பிரதேசத்தில் அம்பேத்கர் நகரில் பிறந்த அருணிமா சின்கா கல்லூரியில் பட்ட மேற்படிப்பை முடித்துவிட்டு சட்டத்தையும் படித்தார். தேசிய அளவிலான கைப்பந்து ஆட்ட வீராங்கனையான[4] அருணிமா 2011ஆம் ஆண்டில் தொடர்வண்டியில் பயணம் செய்தபோது கொள்ளையர்களால் தாக்கப்பட்டு ஓடும் தொடர்வண்டியிலிருந்து வெளியே தூக்கி எறியப் பட்டார். அதன் விளைவாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு இவரின் இடது கால் துண்டிக்கப்பட்டது[5]. 2012 ஆம் ஆண்டில் நடுவண் தொழில் பாதுகாப்புப் படையில் தலைமைக் காவலராகப் பணியில் சேர்ந்தார்[6].
தொடருந்து விபத்து
தொகுமுன்னாள் தேசிய கைப்பந்து மற்றும் கால்பந்து வீரரான சின்கா, மத்திய அரசின் தொழில் பாதுகாப்புப் படையில் சேர்வதற்காக தேர்வெழுத, 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று தில்லிக்கு இலக்னோவில் பத்மாவதி விரைவுவண்டியில் ஏறினார். தனிப்பட்ட விருப்பங்களுக்காக அவரது பை மற்றும் தங்கச் சங்கிலியைப் பறிக்க விரும்பிய அரசியல்வாதிகளால் தொடருந்தின் பொதுப்பெட்டியிலிருந்து வெளியே தள்ளப்பட்டார்.[7] இந்த சம்பவம் குறித்து சின்கா கூறியதாவது:
”நான் எதிர்த்தேன், அவர்கள் என்னை ரயிலில் இருந்து வெளியே தள்ளினார்கள். என்னால் நகர முடியவில்லை. ஒரு ரயில் என்னை நோக்கி வருவதைப் பார்த்த ஞாபகம். நான் எழுந்திருக்க முயற்சித்தேன். அதற்குள் அந்த ரயில் என் கால் மேல் ஏறியது. அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை”
உடனே, ரயில் தண்டவாளத்தில் விழுந்தபோது, இணையான பாதையில் வந்த மற்றொரு ரயில், அவரது கால் முழங்காலுக்குக் கீழே நசுக்கியது. கடுமையான கால் மற்றும் இடுப்பு காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்,[4] மேலும் அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் அவரது பாதிப்படைந்த காலைத் துண்டித்தனர். சின்காவிற்கு இந்திய விளையாட்டு அமைச்சகம் ₹25,000 (US$330) இழப்பீடு வழங்கியது. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் அஜய் மாக்கன் மருத்துவ நிவாரணமாக ₹200,000 (US$2,700) இழப்பீடு வழங்கி வேலைக்கான பரிந்துரையினையும் செய்தார். இந்திய ரயில்வே சின்காவிற்கு வேலை வாய்ப்பை வழங்கியது.[8] 18 ஏப்ரல் 2011 அன்று, இவர் மேல் சிகிச்சைக்காக அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.[9] நான்கு மாதங்களாக இவர் சிகிச்சையில் இருந்தார்.[10] இவருக்கு தில்லியை சேர்ந்த தனியார் நிறுவனம் செயற்கை காலை இலவசமாக வழங்கியது.[11] இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விபத்து குறித்த இவரது வழக்கு பதிவு சந்தேகத்தை ஏற்படுத்தியது. காவல் துறையின் கூற்றுப்படி, இவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் அல்லது ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்பதாகும். ஆனால் காவல்துறை பொய் சொல்கிறது என்று அருணிமா கூறினார். காவல்துறையின் கூற்றுகளுக்கு மாறாக, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இலக்னோ இருக்கை அருணிமா சின்காவுக்கு ₹500,000 (அமெரிக்க டாலர் 6,600) இழப்பீடு வழங்க இந்திய ரயில்வேக்கு உத்தரவிட்டது.[12][13][14][15][16]
மலையேற்றம்
தொகுஇடது கால் துண்டிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோதே எவரெசுடு மலையில் ஏறவேண்டும் என்று விரும்பினார்[17]. அவ்வாறே 2013 ஆம் ஆண்டு மே மாத 21 ஆம் பக்கலில் எவரெசுடு மலையேறி உச்சியை எட்டினார். எவரெசுடு மலை மட்டும் அல்லாது உலகில் உள்ள மற்ற மிக உயர்ந்த மலைகளிலும் ஏறவேண்டும் என்று அருணிமா ஆசைப்பட்டார். ஆதலால் ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ மலை ஐரோப்பாவின் எல்பராஸ் ஆத்திரேலியாவின் கொஸ்கியஸ்கோ ஆகிய மலைகளில் ஏறினார். மேலும் மெக்கின்லே, வின்சன் மாசிப், அக்கோன்காகுவா என்னும் மலைகளில் ஏறி உலகச் சாதனை படைக்க விரும்புகிறார் அருணிமா.
பிற சிறப்புகள்
தொகு2015 ஆம் ஆண்டில் இவருக்கு பத்மசிறீ பட்டம் வழங்கப் பட்டது[18]. இவருடைய தன் வரலாற்று நூல் 2014 திசம்பரில் இந்தியத் தலைமை அமைச்சரால் வெளியிடப்பட்டது. உடல் குறைபாடு கொண்ட சிறுவர் சிறுமியர்களுக்கு விளையாட்டில் பயிற்சி அளிக்கும் நோக்கத்தில் சந்திரசேகர் ஆசாத் விக்லாங்க் கேல் அகாதமி என்னும் ஓர் அமைப்பை நிறுவி உள்ளார்[19].
மேற்கோள்
தொகு- ↑ "Arunima Sinha, Indian Woman, Is First Female Amputee To Climb Everest". The Huffington Post. 2013-05-22. http://www.huffingtonpost.com/2013/05/22/arunima-sinha-first-female-amputee-everest_n_3317252.html. பார்த்த நாள்: 2013-05-22.
- ↑ http://www.indoscopy.com/2013/05/first-indian-amputee-climb-everest.html பரணிடப்பட்டது 2014-02-22 at the வந்தவழி இயந்திரம் | Arunima Sinha first Indian amputee to climb Mt Everest
- ↑ "Arunima becomes first Indian amputee to scale Everest". தி இந்து. 2013-05-21. http://www.thehindu.com/news/national/arunima-becomes-first-indian-amputee-to-scale-everest/article4736281.ece. பார்த்த நாள்: 2013-05-21.
- ↑ 4.0 4.1 "National player thrown off train in UP, loses leg". India Today. 2011-04-13. http://indiatoday.intoday.in/story/national-player-thrown-off-train-in-uttar-pradesh-loses-leg/1/135153.html. பார்த்த நாள்: 2013-05-21.
- ↑ "Arunima Sinha becomes first Indian amputee to scale Mt Everest". இந்தியன் எக்சுபிரசு. 2013-05-21. http://www.indianexpress.com/news/arunima-sinha-becomes-first-indian-amputee-to-scale-mt-everest/1118709/. பார்த்த நாள்: 2013-05-21.
- ↑ "Amputee Everest climber Arunima Sinha to be an officer in CISF". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2013-05-23 இம் மூலத்தில் இருந்து 2013-06-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130609061702/http://articles.timesofindia.indiatimes.com/2013-05-23/india/39474986_1_everest-climber-arunima-sinha-cisf. பார்த்த நாள்: 2013-05-24.
- ↑ "This inspiring story of the first female amputee to climb Mount Everest will make you proud".
- ↑ "Railways job to volleyball player who lost her leg". India Today. 14 April 2011. http://indiatoday.intoday.in/story/rly-board-offers-help-to-volleyball-player-who-lost-leg/1/135242.html.
- ↑ "AIIMS calls cops to guard Arunima against infection". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 April 2011 இம் மூலத்தில் இருந்து 29 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130629131258/http://articles.timesofindia.indiatimes.com/2011-04-24/delhi/29468454_1_leg-m-c-misra-aiims-trauma-centre.
- ↑ "Arunima Sinha, the girl who lost a leg in battling snatchers becomes first amputee to scale Everest". India Today. 21 May 2013. http://indiatoday.intoday.in/story/amputee-athlete-arunima-sinha-to-scale-mount-everest/1/272266.html.
- ↑ "Brave Arunima is back on her feet". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 20 June 2011 இம் மூலத்தில் இருந்து 6 செப்டம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110906092306/http://articles.timesofindia.indiatimes.com/2011-06-20/delhi/29679585_1_low-intensity-suction-pipes-prosthetic-leg-aiims-doctors.
- ↑ "Arunima may have attempted suicide or met with an accident: Railways". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 26 April 2011 இம் மூலத்தில் இருந்து 29 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130629122402/http://articles.timesofindia.indiatimes.com/2011-04-26/india/29474344_1_football-and-volleyball-player-level-football-and-volleyball-gold-chain.
- ↑ "Police are lying, says assaulted Arunima Sinha". Zee News. 27 April 2011. http://zeenews.india.com/news/nation/police-are-lying-says-assaulted-arunima-sinha_702671.html.
- ↑ "Now, athlete hits back at railway police". இந்தியன் எக்சுபிரசு. 28 April 2011. http://www.indianexpress.com/news/now-athlete-hits-back-at-railway-police/782587/.
- ↑ "Court tells railways to pay Rs. 5 lakh relief to Arunima". Legal India. 20 April 2011 இம் மூலத்தில் இருந்து 24 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181224204031/https://www.legalindia.com/court-tells-railways-to-pay-rs-5-lakh-relief-to-arunima.
- ↑ "Pay interim compensation to Arunima: HC to UP govt". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 20 April 2011 இம் மூலத்தில் இருந்து 5 ஜனவரி 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190105201420/https://www.hindustantimes.com/archive-news/.
- ↑ "Win: Arunima Sinha is first Indian amputee to scale Mount Everest". First Post (India). 2013-05-21. http://www.firstpost.com/sports/win-arunima-sinha-is-first-indian-amputee-to-scale-mount-everest-801977.html. பார்த்த நாள்: 2013-05-24.
- ↑ "Padma Awards 2015". Press Information Bureau. Archived from the original on 26 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 25 January 2015.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ "Arunima chases her next dream: A sports academy in Unnao". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 2018-12-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181224204010/https://www.hindustantimes.com/archive-news/.