அருண் கமல் (Arun Kamal) நவீன இந்தி இலக்கியத்தில் முற்போக்கான, கருத்தியல் கவிதை நடையைக் கொண்ட ஓர் இந்தியக் கவிஞர். கவிதைகள் மட்டுமின்றி விமர்சனம் எழுதியும் கமல் இந்தியிலும் மொழியாக்கம் செய்துள்ளார்.[1][2] இவரது முதல் புத்தகம் 'அப்னி கேவல் தர்' 1980-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. மேலும், இந்தப்புத்தகம் இவரை சமகாலத்தின் முக்கியமான கவிஞராக நிலைநிறுத்தியது. 1989- ஆம் ஆண்டில் இவரது இரண்டாவது கவிதைத்தொகுப்பு 'சபூட்' வெளியிடப்பட்டது. 1996-ஆம் ஆண்டில் இவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பு 'புதிய இடம்' இவருக்கு இந்தி மொழிக்கான சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றுத்தந்தது.1998-ஆம் ஆண்டில் இந்தி மொழி படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.[3]

இவர் பீகாரில் உள்ள நஸ்ரிகஞ்சில் 1954 பிப்ரவரி 15 அன்று பிறந்தார். பாட்னா பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். பாட்னாவில் வசிக்கிறார். 

மேற்கோள்கள் தொகு

  1. "Arun Kamal's Biography". பார்க்கப்பட்ட நாள் 13 June 2021.
  2. "Arun Kamal's Biography". பார்க்கப்பட்ட நாள் 16 June 2021.
  3. https://sahitya-akademi.gov.in/awards/akademi%20samman_suchi.jsp#HINDI. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருண்_கமல்&oldid=3944222" இலிருந்து மீள்விக்கப்பட்டது