அருண் பாரதி
அருண் பாரதி (Arun Bharti) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஜமுய் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ் கட்சி) உறுப்பினராக உள்ளார். [1][2][3]
அருண் பாரதி | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2024 | |
முன்னையவர் | சிரக் பஸ்வான் |
தொகுதி | ஜமுய் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) |
வேலை | அரசியல்வாதி |
ஹாஜீப்பூர் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராம் விலாசு பாசுவானின் மருமகனுமான சிராக் பாசுவானின் மைத்துனர் ஆவார்.[4]
இளமை
தொகுபொகாரோ இரும்பு நகரில் வணிகப் பார்வையாளராகப் பணியாற்றிய ராம் யாஷ் ராம் மற்றும் பாட்னாவின் ஹாஜிபூரில் பீகார் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரான மருத்துவர் ஜோதி ஆகியோரின் மகனாவார், அருண் பாரதி.[5]
தில்லி பல்கலைக்கழகத்தின் சிறீராம் வணிகக் கல்லூரியில் வணிகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற பின்னர் 2004ஆம் ஆண்டில் இசுக்காட்லாந்தில் உள்ள இசுட்ராத்க்ளைட் வணிகப் பள்ளி பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[6]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇராம் விலாசு பாசுவான் மற்றும் ரீனா பாசுவான் ஆகியோரின் மகளான நிஷா பாரதியை பாரதி மணந்தார்.[6]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Chirag Paswan's brother-in-law Arun Bharti wins from Jamui". Inshorts - Stay Informed (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
- ↑ "Jamui, Bihar Lok Sabha Election Results 2024 Highlights: Arun Bharti Secures the Seat by 153055 Votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
- ↑ "Jamui Lok Sabha Constituency: LJP's Arun Bharti vs RJD's Archana Ravidas". The Indian Express (in ஆங்கிலம்). 2024-04-17. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
- ↑ "Bihar Politics: चिराग के जीजा के पास कितनी संपत्ति? चुनावी हलफनामा से हो गया सब क्लियर, पत्नी की इनकम भी आई सामने - How much property does Chirag Paswan Brother inlaw Arun Bharti have Lok Sabha Election 2024". Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-06-08.
- ↑ "कौन हैं अरुण भारती जिनको चिराग पासवान जमुई लोकसभा सीट से चुनाव लड़ा सकते हैं?". Hindustan (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-06-08.
- ↑ 6.0 6.1 "इंग्लैंड से MBA , राजनीतिक से पुराना कनेक्शन, जानें कौन हैं अरुण भारती?". News18 हिंदी (in இந்தி). 2024-03-27. பார்க்கப்பட்ட நாள் 2024-06-08.