அருந்ததி பாண்டவனே

இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை

அருந்ததி பாண்டவனே (Arundhati Pantawane) இந்தியப் பெண் இறகுப்பந்தாட்ட வீராங்கனையாவார். 1989 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஒற்றையர் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக அருந்ததி விளையாடுகிறார். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் அணி நிகழ்வில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [1] 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்றார், மேலும் 75ஆவது மூத்த தேசிய இறகுப்பந்து வெற்றியாளர் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். [2] [3]

அருந்ததி பாண்டவனே
Arundhati Pantawane
நேர்முக விவரம்
பிறப்பு பெயர்அருந்ததி பாண்டவனே
நாடு இந்தியா
பிறப்பு2 செப்டம்பர் 1989 (1989-09-02) (அகவை 35)
நாக்பூர் மகாராட்டிரம் இந்தியா
வசிக்கும் இடம்நாக்பூர் மகாராட்டிரம் இந்தியா
உயரம்5"4 அடி
எடை50 கிலோ கிராம்
கரம்வலது கை
பயிற்சியாளர்புல்லேலா கோபிசந்த்
பெண்கள் ஒற்றையர்
விளையாட்டு பட்ட(ம்/ங்கள்)2012 பகுரைன் பன்னாட்டு போட்டி
விளையாடியவை2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
பெரும தரவரிசையிடம்49 (27 சூன் 2013)
தற்போதைய தரவரிசை52 (9 ஆகத்து 2013)
இ. உ. கூ. சுயவிவரம்

வெற்றிகள்

தொகு

தனிப்பட்டவை

தொகு
வ. எண் ஆண்டு போட்டி இறுதிப்போட்டியில் எதிரணி புள்ளிகள்
1 2012 பகுரைன் பன்னாட்டு போட்டி   தன்வி லாடு 20–22, 21–12, 21–19

தனிப்பட்ட இரண்டாமிடம்

தொகு
வ. எண் ஆண்டு போட்டி இறுதிப்போட்டியில் எதிரணி புள்ளிகள்
1 2011 எசுதோனிய பன்னாட்டுப் போட்டி   மிச்செல் சான் கிட் யிங்கு 16–21, 19–21
2 2011 செக் பன்னாட்டுப் போட்டி   கிறிசுடினா காவ்ன்கோல்டு 10–21, 18–21

குடும்பம்

தொகு

2016 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் அருந்ததி கோழிக்கோடு இறகுப்பந்து வீரர் அருண் விசுணுவை மணந்தார். [4] இந்த தம்பதிக்கு அதர்வ் அருண் விசுணு என்ற மகன் உள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Asian Games: Indian shuttlers out of badminton team events". http://www.dnaindia.com/sport/report-asian-games-indian-shuttlers-out-of-badminton-team-events-1465956. பார்த்த நாள்: 8 April 2016. 
  2. "Arundhati and Guru Sai Dutt bag badminton titles". http://www.thehindu.com/todays-paper/tp-sports/arundhati-and-guru-sai-dutt-bag-badminton-titles/article1478903.ece. பார்த்த நாள்: 8 April 2016. 
  3. "75th Senior National Badminton Championships,Rohtak-2010". பார்க்கப்பட்ட நாள் 8 April 2016.
  4. Nayse, Suhas (January 4, 2016). "Badminton player Arundhati weds Arun Vishnu" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருந்ததி_பாண்டவனே&oldid=3842122" இலிருந்து மீள்விக்கப்பட்டது