அருந்தவபுரம் (தஞ்சாவூர்)

அருந்தவபுரம் (Arundavapuram) என்பது இந்தியாவின் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் அம்மாபேட்டை பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரிய கிராமம்.

மக்கள்தொகை தொகு

அருந்தவபுரத்தில் மொத்தம் 651 வீடுகள் உள்ளன, மேலும் 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,603 மக்கள் வசிக்கின்றனர்.[1] கல்வியறிவு விகிதம் தமிழ்நாட்டின் 80.09% உடன் ஒப்பிடும்போது 73.01% ஆகும்.

அருகிலுள்ள இடங்கள் தொகு

அருந்தவபுரம் மாவட்டத் தலைநகர் தஞ்சாவூரிலிருந்து 22.2 கி.மீ. தொலைவிலும்; வருவாய் கோட்டத் தலைநகரான அம்மாபேட்டையிலிருந்து 5.2 கி.மீ. தொலைவிலும், சாலியமங்கலத்திலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், நீடாமங்கலத்திலிருந்து 9.1 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

அருகில் உள்ள விமான நிலையம் தொகு

தஞ்சாவூர் விமானப்படை நிலையம் அருந்தவபுரத்திற்கு அருகில் உள்ள விமான நிலையம் ஆகும். அருந்தவபுரத்திலிருந்து 24.8 கிமீ தொலைவில் இது அமைந்துள்ளது.

சோழர்கால சிவலிங்கம் தொகு

கி. பி. பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவலிங்கம் ஒன்று, அருந்தவபுரம் பகுதியிலுள்ள குளக்கரையில், பெரிய அரசமரம் ஒன்றின் கீழ் புதையுண்டது கண்டுபிடிக்கப்பட்டு, வெளிக்கொணரப்பட்டு, மக்கள் வழிபாட்டிற்காக, புனரமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Arundavapuram I Population - Thanjavur, Tamil Nadu". 2011.
  2. "அரசமரம் அடிப்பகுதியில் இருந்து பழமையான சோழர் கால சிவலிங்கம் கண்டெடுப்பு". Dinamalar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-04-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருந்தவபுரம்_(தஞ்சாவூர்)&oldid=3938634" இலிருந்து மீள்விக்கப்பட்டது