அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில்
அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் விருதுநகர் மாவட்டத்தின் அருப்புக்கோட்டை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.
அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 9°30′22″N 78°06′05″E / 9.5062°N 78.1015°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | விருதுநகர் மாவட்டம் |
அமைவிடம்: | அருப்புக்கோட்டை |
சட்டமன்றத் தொகுதி: | அருப்புக்கோட்டை |
மக்களவைத் தொகுதி: | விருதுநகர் |
ஏற்றம்: | 144 m (472 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | சொக்கநாதர் |
தாயார்: | மீனாட்சி அம்மன் |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
அமைவிடம்
தொகுஇக்கோயில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டையில் அமைந்துள்ளது. இவ்வூர் திருச்சுழி சாலையில் சொக்கலிங்கபுரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் செங்காட்டிருக்கை இடத்துவளி என்றழைக்கப்பட்டது.[1]இக்கோயிலானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 144 மீட்டர் உயரத்தில், 9°30′22″N 78°06′05″E / 9.5062°N 78.1015°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.[1]
இறைவன், இறைவி
தொகுஇக்கோயிலின் மூலவராக சொக்கநாதர் உள்ளார். இறைவி மீனாட்சி ஆவார். கோயிலின் தல மரம் வில்வம் ஆகும். சூரிய புஷ்கரணி, வில்வ தீர்த்தம் ஆகியவை கோயிலின் தீர்த்தங்களாகும்.[1]
அமைப்பு
தொகுஇக்கோயில் பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ள இக்கோயில் ஐந்து நிலை ஐந்து கலசங்களைக் கொண்ட கோபுரத்தைக் கொண்டுள்ளது. அடுத்து கொடி மரம், பலி பீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. மூலவர் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். மூலவருக்கு வலது புறம் சோமாஸ்கந்தர் சன்னதியும், அடுத்து மீனாட்சி அம்மன் சன்னதியும் உள்ளன. மூலவர் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, கற்பகவல்லி, லிங்கோத்பவர் உள்ளனர். இறைவியின் கோஷ்டத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய சக்திகள் உள்ளனர். திருச்சுற்றில் கன்னி மூல கணபதி, விநாயகர், முருகன், சிவகாமி, சப்த கன்னி, வடக்கு திசை நோக்கிய நிலையில் சண்டிகேசுவரர், சரசுவதி, வல்ல சித்தர், காசி விசுவநாதர், விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிமணியர், மகாலட்சுமி, கால பைரவர், சந்திரன், நவக்கிரகம், நந்தி, ஆஞ்சநேயர் ஆகியோர் உள்ளனர். ஒவ்வோராண்டும் மார்ச் 20ஆம் நாள் முதல் 30ஆம் நாள் வரை சூரிய ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம். இங்குள்ள படித்துறை விநாயகர் ஜடாமுடியுடன் காணப்படுகிறார்.[1]
விழாக்கள்
தொகுஆனி பூசம் கொடியேற்றம், ஆனி கேட்டை தேர், மூல நட்சத்திரத்தில் தீர்த்தவாரி என்ற வகையில் 12 நாள் திருவிழா, ஆனி பிரமோற்சவம், சிவராத்திரி, நவராத்திரி, ஐப்பசி அன்னாபிசேகம், கார்த்திகை தெப்பம், கார்த்திகை சோம வார சங்காபிஷேகம், திருவாதிரை உள்ளிட்ட விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.