அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி

அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி (ஆங்கிலம்:Arulmigu Palaniandavar College of Arts and Culture) என்பது திண்டுக்கல் பழனியில் உள்ள தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரியாகும். இது இந்து சமய அறநிலையத் துறையின் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மூலம் 1963 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவருகிறது.[1] என்ஏஏசி தரமதிப்பீட்டில் பி++ பெற்றுள்ளது.[2] தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஆட்சிக்குழுவின் தலைவராகவும், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் இணை ஆணையர்/ செயல் அலுலவர் கல்லூரியின் தாளாளராகவும் துணை ஆணையர் இக்கல்லூரியில் செயலராகவும் உள்ளனர்.[3]

அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி
உருவாக்கம்1963
சார்புமதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
Religious affiliation
பழனி முருகன் கோவில்
தலைவர்கே.வி. முரளிதரன் இ.ஆ.ப.
அமைவிடம்
திண்டுக்கல் சாலை, பழனி
இணையதளம்www.apcac.edu.in

துறைகள் தொகு

அரசு உதவி பெறும் துறைகளாக தமிழ், ஆங்கிலம், வரலாறு, இந்தியப் பண்பாடு, பொருளாதாரம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல் ஆகியவை உள்ளன. சுயநிதிப் பிரிவில் உள்ள துறைகளாக தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல், கணினி அறிவியல் இளநிலை வணிக நிர்வாகவியல் ஆகியவை உள்ளன.[4] இளநிலைப் படிப்புகள்

பட்டம் அறிமுகமான ஆண்டு எண்ணிக்கை
இளநிலை இந்தியப் பண்பாடு 1960-61 40
இளநிலை கணிதம் 1964-65 40
இளநிலை வேதியியல் 1964-65 32
இளநிலை ஆங்கிலம் 1964-65 32
இளநிலை இயற்பியல் 1965-66 32
இளநிலை பொருளாதாரம் 1966-67 40
இளநிலை விலங்கியல் 1967-68 32
இளநிலை வணிகவியல் 1970-71 40
இளநிலை தாவரவியல் 1971-72 32
இளநிலை தமிழ் 1971-72 32
இளநிலை வரலாறு 1974-75 30
இளநிலை வரலாறு (சுற்றுலா தொழில்) 1997-98 30

முதுநிலைப் படிப்புகள்

பட்டம் அறிமுகமான ஆண்டு எண்ணிக்கை
முதுநிலை இந்தியப் பண்பாடு 1971-72 28
முதுநிலை விலங்கியல் 1971-72 20
முதுநிலை தாவரவியல் 1975-76 20
முதுநிலை ஆங்கிலம் 1979-80 28
முதுநிலை வணிகவியல் 1981-82 20
முதுநிலை தமிழ் 1982-83 28
முதுநிலை இயற்பியல் 1982-83 16
முதுநிலை வேதியியல் 1984-85 16
முதுநிலை பொருளாதாரம் 1986-87 28
முதுநிலை வரலாறு 1987-88 28

தமிழ், இந்தியப் பண்பாடு, வேதியியல், விலங்கியல், ஆங்கிலம், தாவரவியல் ஆகிய துறைகளில் ஆய்வுப் படிப்புகளையும் வழங்குகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "பழனி கோயில் நிர்வாகத்தின் பள்ளி, கல்லூரிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் தொடக்கம்". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2022/nov/16/palani-temple-administration-starts-breakfast-program-in-schools-and-colleges-3950363.html. பார்த்த நாள்: 2 November 2023. 
  2. "Contact". ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2023.
  3. "பாடப் பதாகை" (PDF). www.apcac.edu.in. பார்க்கப்பட்ட நாள் 2 November 2023.
  4. "பாடப் பிரிவுகள்". apcac.edu.in. பார்க்கப்பட்ட நாள் 2 November 2023.