அரேனியசுக் கோட்பாடு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மின்பகுபொருள் (அமிலம், உப்பு, உப்புமூலம்) நீரில் கரைக்கப்படும் போது அதன் பெரும்பகுதி மூலக்கூறுகள் நேர் மற்றும் எதிர் அயனிகளாகத் தானே பிரிந்து விடுகின்றன. இந்நிலையில் இக்கரைசல்களுக்கு ஒரு புற மின்னழுத்த வேறுபாடு செலுத்தப்பட்டால் நேர் மின்முனையை நோக்கி, எதிர்அயனிகளும் எதிர்மின் முனையினை நோக்கி நேர்அயனிகளும் சென்று, புதிதாக எலக்டரான்களை ஏற்றோ அல்லது விடுத்தோ நடுநிலையை அடைகின்றன. இவ்வாறு நீர்மங்களில் மின்சாரம் பாய்கிறது. அயனிகள் பிரிவது அதிகரிப்பதால் சவ்வூடுபரவல் அழுத்தம் மாறுபடவும், கொதிநிலை ஏற்றமும், உருகு நிலை குறைவுபடவும் காரணமாய் அமைகின்றது. நீர்மம் ஆக்கப்படுவதைப் பொறுத்து அயனிகள் பிரிவது அமையும். மிகவும் அதிக நீர்மம் ஆக்கப்பட்ட நிலையில் பிரிதலும் முழுமைபெறும். இதுவே அரேனியசுக் கோட்பாடு (Arrhenius theory) ஆகும்.