அர்ச்சனா உடுப்பா
அர்ச்சனா உடுப்பா (Archana Udupa) இந்தியாவைச் சேர்ந்த பாடகியான [1] இவர் பக்தி, பாரம்பரிய இசை, திரைப்பட பாடல்களைப் பாடுகிறார். இவர் அனைத்திந்திய வானொலிலும்,தூர்தர்ஷனிலும் தரக்கலைஞர் ஆவார். இவர் 1998இல் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டி.வி.எஸ் "ச ரி க ம ப" என்ற பாடல் போட்டி நிகழச்சியின் இறுதி வெற்றியாளர் ஆவார்.[2] இந்தித் திரைப்பட பாடல் போட்டியில் வெண்ற தென்னிந்தியாவைச் சேர்ந்த முதல் நபராகவும் இருக்கிறார். தற்போது வரை இவர் 1000க்கும் மேற்பட்ட இசைத்தட்டுகளிலும், குறுந்தகடுகளிலும் பாடியுள்ளார்.[3]
அர்ச்சனா உடுப்பா | |
---|---|
பிறப்பு | 3 பெப்ரவரி 1983 நாகரா, சீமக்கா, கருநாடகம் |
பிறப்பிடம் | இந்தியா |
இசை வடிவங்கள் | பக்தி, பாரம்பரிய இசை, திரையிசை |
தொழில்(கள்) | பாடுதல் |
2012 ஆம் ஆண்டில் வெளியான பாகீரதி என்ற திரைப்படத்தில் பாடிய பாடலுக்காக சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதை வென்றார் [4] கன்னட கோகிலா என்ற புகழ்பெற்ற பாடல் நிகழ்ச்சியின் இரண்டு பருவங்களுக்கு சந்தன் ஷெட்டி, சாது கோகிலா ஆகியோருடன் நடுவராக இருந்தார். பல்துறை பாடகியான இவர் ஒரு இசைக்கலைஞருமான சிமோகா சுப்பண்ணாவின் மகனும் வழக்கறிஞருமான சிறீரங்காவை 2002இல் திருமணம் செய்து கொண்டார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "spell bound performance". gulf-times.com. Archived from the original on 24 February 2008. பார்க்கப்பட்ட நாள் 7 September 2009.
- ↑ "Singing her way to success". 29 November 1998. Archived from the original on 28 January 1999. பார்க்கப்பட்ட நாள் 27 April 2016.
- ↑ "On my pinboard: Archana Udupa". Deccan Herald. 30 January 2020.
- ↑ "Karnataka State Film Awards 2010-11 winners". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 29 June 2019.
- ↑ "It's wedding time!". Deccan Herald. 26 May 2002. Archived from the original on 2 டிசம்பர் 2002. பார்க்கப்பட்ட நாள் 9 October 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unfit URL (link)