அர்ஜெண்டினா நாட்டுப்பண்

அர்ஜெண்டினா நாட்டின் நாட்டுப்பண்

அர்ஜெண்டினா நாட்டுப்பண் அல்லது அர்ஜெண்டினா தேசிய கீதம் ("Argentine National Anthem" (எசுப்பானியம்: Himno Nacional Argentino) என்பது அர்ஜெண்டினாவின் நாட்டுப் பண்ணாகும். இப்பாடல் வரிகளை வின்சண்ட் லோப்பஸ் பிலேன்ஸ் என்பவரால் எழுதப்பட்டது. இந்த வரிகளுக்கு எசுபானிய இசையமைப்பாளரான பிளேஸ் பரேரா என்பவர் இசையமைத்தார்.[1] இந்தப் படைப்பானது 1813, மே 11 அன்று நாட்டுப் பண்ணாக அதிகாரப்பூர்வமாக அந்நாட்டால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு மே 11 நாளை அந்நாடு தேசிய கீத நாளாக ஏற்றுக்கொண்டு கொண்டாடி வருகிறது.

அர்ஜெண்டினா நாட்டுப்பண்
Himno Nacional Argentino

ஆங்கிலம்: Argentine National Anthem
லூயிஸ் மெஸ்மெய்கெர்சால் பியானோவில் வாசிக்க பிரெஞ்சு ஒலிப்புக்கேற்ப வரைதல் (1822 வெளியிடப்பட்டது). இது அர்ஜென்டினாவுக்கு வெளியே கண்டறியப்பட்ட அர்ஜென்டினா தேசிய கீதத்தின் மிக பழமையான இசைத் தாள்.

 அர்கெந்தீனா நாடு கீதம்
இயற்றியவர்வின்சண்ட் லோப்பஸ் பிலேன்ஸ், 1812
இசைபிளேஸ் பரேரா, 1813
சேர்க்கப்பட்டதுமே 11, 1813; 211 ஆண்டுகள் முன்னர் (1813-05-11)
இசை மாதிரி
"அர்ஜெண்டினா நாட்டுப்பண்" (இசைக்ருவியில்)

ஸ்பெயின் நாட்டிடம் இருந்து விடுதலைப் பெறுவதற்கு முன்னதாக இயற்றப்பட்ட இப்பாடலில், ஸ்பெயின் நாட்டுக்கு எதிரான பத்திகள் இருந்தன. தற்காலத்தில் அப்பத்திகள் விலக்கப்பட்டு, முதலாவது மற்றும் நிறைவு பத்திகள் மட்டும் பாடப்படுகின்றன.

வரிகள்

தொகு

நவீன பதிப்பு

தொகு

1924 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நவீன பதிப்பான, ஸ்பெயின் எதிர்ப்பு நடு பத்திகள் விலக்கப்பட்ட பாடல்வரிகள் பின்வறுமாறு.

சுருக்கப்பட்ட நவீன பதிப்பு (1924) தமிழ் மொழிபெயர்ப்பு

Oíd, mortales, el grito sagrado:
"¡Libertad! ¡Libertad! ¡Libertad!"
Oíd el ruido de rotas cadenas
ved en trono a la noble igualdad

Ya su trono dignísimo abrieron
las Provincias Unidas del Sud
y los libres del mundo responden:
"¡Al gran pueblo argentino, salud!"
"¡Al gran pueblo argentino, salud!"
Y los libres del mundo responden:
"¡Al gran pueblo argentino, salud!"
Y los libres del mundo responden:
"¡Al gran pueblo argentino, salud!"

Sean eternos los laureles,
que supimos conseguir,
que supimos conseguir.
Coronados de gloria vivamos
O juremos con gloria morir!
O juremos con gloria morir!
O juremos con gloria morir!

மனிதர்களே, புனிதக் குரலைக் கேளுங்கள்:
"விடுதலை! விடுதலை! விடுதலை!"
உடைக்கப்பட்ட விலங்குகளின் ஒலியைக் கேளுங்கள்.
புனிதமான சமத்துவம் அரியணையில் அமர்வதைப் பாருங்கள்.

அவர்களின் மிகப் பயனுள்ள ஆட்சியால் திறந்து கொண்டது
தென்னக மாகாணங்களின் ஒன்றியம்.
உலகின் சுதந்திரமான மக்கள் பதில் உரைக்கிறார்கள்:
"வாழ்க சிறப்பு மிகு அர்ஜெண்டினா மக்கள்!"
"வாழ்க சிறப்பு மிகு அர்ஜெண்டினா மக்கள்!"
மற்றும் உலகின் சுதந்திரமான மக்கள் பதில் உரைக்கிறார்கள்:
"வாழ்க சிறப்பு மிகு அர்ஜெண்டினா மக்கள்!"
மற்றும் உலகின் சுதந்திரமான மக்கள் பதில் உரைக்கிறார்கள்:
"வாழ்க சிறப்பு மிகு அர்ஜெண்டினா மக்கள்!"

நாம் சாதிப்பதற்கு சாத்தியமாய் இருந்த
நாம் சாதிப்பதற்கு சாத்தியமாய் இருந்த
புகழ் நிலைத்து நிற்கட்டும்
புகழ் மகுடம் சூடி நாம் வாழக் கடவோம்
அல்லது புகழுடன் மரிக்க உறுதி பூணுவோம்
அல்லது புகழுடன் மரிக்க உறுதி பூணுவோம்
அல்லது புகழுடன் மரிக்க உறுதி பூணுவோம்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Símbolos Nacionales" [National Symbols] (in Spanish). Presidency of the Argentine Nation. பார்க்கப்பட்ட நாள் 21 November 2011. La necesidad de tener una canción patriótica, que surgió con la Revolución de Mayo y que el Triunvirato supo comprender, se ve plasmada hoy en el Himno Nacional Argentino, con música de Blas Parera, letra de Vicente López y Planes, y arreglo de Juan P. Esnaola.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்l

தொகு