அர்தாகான் மாகாணம்
அர்தாகான் மாகாணம் (Ardahan Province, துருக்கியம்: Ardahan ili ; ஆர்மீனியம்: Արդահան ; Georgian ), என்பது துருக்கியின் வடகிழக்கில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இது நாட்டின் எல்லையில், துருக்கி ஜார்ஜியா மற்றும் ஆர்மீனியாவின் சர்வதேச எல்லையில் உள்ளது. மாகாண தலைநகரம் அர்தாகான் நகரம்.
வரலாறு
தொகுஇந்த பிராந்தியம் பற்றி முதல் தற்போது உள்ள உள்ள முதல் பதிவானது இசுட்ராபோவின் பதிவு ஆகும். அவர் இதை கோகரீன் (குகர்க்) என்று அழைக்கிறார், மேலும் இது ஆர்மீனிய இராச்சியத்தின் ஒரு பகுதி என்றும், ஐபீரியா இராச்சியத்திலிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.[1] நடுக் காலத்தில், அர்பாசிட் கலிபாவிலிருந்து வந்து கருங்கடலைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குப் எடுத்துச்செல்லும் பொருட்களுக்கான முக்கிய போக்குவரத்து இடமாக அர்தாகான் இருந்தது. எட்டு முதல் 10 ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் இப்பகுதி தாவோ-கிளார்ஜெட்டியின் பாக்ரேஷனி இளவரசர்களின் கைகளிலும், பின்னர் 11 முதல் 15 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஜார்ஜியா இராச்சியத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தது. மேலும் இப்பகுதியானது பைசண்டைன்-ஜார்ஜியப் போர்கள் நடந்த இடம் ஆகும். அந்தியோகியாவின் அரபு வரலாற்றாசிரியர் யஹ்யாவின் கூற்றுப்படி, பைசாண்டின்கள் அர்தாகானை தரைமட்டமாக்கி 1011 இல் அதன் மக்களைக் கொன்றனர். மெங்கொலியர்கள் 1230 இல் இப்பகுதியைக் கைப்பற்றினர். ஆனால் சாம்ச்கேயின் ஜார்ஜிய இளவரசர்கள் அதை 1266 இல் மீண்டும் கைப்பற்றினர். 1555 இல் ஈரானின் சாபவித்து அரசுடன் கையெழுத்திடப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் விளைவாக, அர்தாகான் உதுமானியப் பேரரசு கைகளுக்குச் சென்று, துருக்கியின் ஒரு பகுதியாக ஆனது. 1578 ஆம் ஆண்டில் ஒட்டோமன்கள் முன்னாள் ஜார்ஜிய இளவரசரான மனுச்சரை ( இஸ்லாமிற்கு மாறி முஸ்தபா என்று பெயரை மாற்றிக்கொண்டவர்) முதல் ஆளுநராக நியமித்தனர். 1625 முதல் இப்பகுதி முழுமையும் முஸ்லீம் அட்டாபெக்ஸின் சம்ஸ்கேவின் பரம்பரை உடைமையாக இருந்தன, இது 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை சில விதிவிலக்குகளுடன் பரம்பரை ஆளுநர்களால் நிர்வகிக்கப்பட்டது.
1878 ஆம் ஆண்டில், ருஸ்ஸோ-துருக்கியப் போருக்குப் பிறகு (1877-1878), இப்பகுதி ரஷ்ய சாம்ராஜ்யத்தில் இணைக்கப்பட்டது, 1918 வரை கார்ஸ் ஒப்லாஸ்ட் என்று அழைக்கப்பட்டது. மாகாணத்தின் வடக்கு பகுதி 1918 முதல் 1921 வரை ஜார்ஜியாவின் ஜனநாயக குடியரசின் பகுதியாகவும் மற்றும் மாகாணத்தின் தெற்கு பகுதி 1918 முதல் 1920 வரை ஆர்மீனியா ஜனநாயக குடியரசு பகுதியாகவும் இருந்தது. 1921 ஆம் ஆண்டில் கார்ஸ் ஒப்பந்தத்தின் மூலமாக துருக்கியால் அர்தாகான் மீட்கப்பட்டது.
பாகு-திபிலிசி-செஹான் எண்ணைக் குழாய் அமைக்கும் திட்டமானது 2000 முதல் உள்ளூர் பொருளாதாரத்திற்கு ஒரளவுக்கு ஊக்கத்தை அளித்தது.
நிலவியல்
தொகுஅர்தாகான் மாகாணம் துருக்கியின் வடகிழக்கில் அமைந்துள்ளது, இது கிழக்கு அனடோலியாவின் உயர் பீடபூமியின் கிழக்கு முனை லெசர் காகசஸ் மலைத்தொடருடன் இணைந்த பகுதியாக உள்ளது. இதன் விளைவாக இது மிக உயரமான மற்றும் கடுமையான குளிர்காலம் கொண்ட பகுதியாக உள்ளது. இது கவரக்கூடிய நாட்டுப்புறப் பகுதியாக உள்ளது. இப்பகுதியான ஆண்டின் பல மாதங்கள் பனிபெய்யும் பகுதியாக உள்ளது. இந்த பிராந்தியத்தின் வெப்பநிலை சராசரியாக −20 °C (−4 °F) அடைகிறது மற்றும் சிலசமயங்ளில் கோடை மாதங்கள் உட்பட ஆண்டு முழுவதும் உறைபனியால் மூடக்கூடியதா உள்ளது.
உள்ளூர் பொருளாதாரம் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை அடிப்படையாக கொண்டது. 1993 வரை அர்தாகான் கார்ஸ் மாகாணத்தின் ஒரு மாவட்டமாக இருந்தது, இது ஒரு தனி மாகாணமாக மாறிய பிறகு உள்கட்டமைப்பில் அதிக முதலீட்டைப் பெற்றது.
ஜார்ஜியாவின் சம்த்கே-ஜவகெட்டி மாவட்டத்தில் இரண்டு போக்குவரத்து கடவுப் பகுதிகள் உள்ளன, ஒன்று போசோஃப் மற்றொன்று (தற்போது மூடப்பட்டுள்ளது) ஆல்டரில் என்பதாகும். துருக்கிய இராணுவம் இந்த எல்லை மாவட்டத்தில் ஒரு வலுவான முகாமைக் கொண்டுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரத்திற்கு ஒருவிதத்தில் பயனுள்ளதாக உள்ளது.
மாவட்டங்கள்
தொகுஅர்தாகான் மாகாணம் 6 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
குறிப்புகள்
தொகு- ↑ இசுட்ராபோ. Geographica. 11.14.7 பரணிடப்பட்டது 2014-02-01 at the வந்தவழி இயந்திரம்.