அர்தோக்சோ
அர்தோக்சோ ( Ardoksho ) என்பது செல்வத்தின் ஈரானிய தெய்வமாகும். முதலாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடு ஆசியா மற்றும் தெற்கு ஆசியாவில் குசானப் பேரரசின் பெண் தெய்வமாக இருந்தது. இவள் கிழக்கு ஈரானிய தெய்வமாகவும் இலட்சுமியின் மாற்றுப் பெயராகவும் கருதப்படுகிறாள்.[1] இவள் அவெத்தாவில் ஆஷி என்று அழைக்கப்படுகிறாள். [1]

பௌத்தத்தின் சில வகைகளில் காணப்படும் ஹாரிதி தெய்வத்திற்கு ஒப்பானவளாக இவள் அடிக்கடி கருதப்படுகிறாள். பாரசீக தெய்வமான அனாகிதா, கிரேக்க டைச், உரோமன் பார்துனா, இந்து ஸ்ரீ ஆகியவற்றுடன் ஒப்புமைகளும் வரையப்பட்டுள்ளன.
குசான சகாப்தத்தின் நடுப்பகுதியில், குசான நாணயங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள ஆண் இணையான ஓஷோவைத் தவிர அர்தோக்சோ மட்டுமே தெய்வமாக இருந்தாள்.
-
குவிஷ்கனின் நாணயம் (150-180 பொ.ச.), நின்றுகொண்டிருக்கும் அர்தோக்சோ, அவளது பெயர் கிரேக்க எழுத்தில் உள்ளது.
-
வசிஷ்கனின் நாணயம் (பொ.ச. 222-240) அர்தோக்சோ சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளவாறு காணப்படுகிறார். மேலும் அவளது பெயர் கிரேக்க எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது.
-
கிபுனதாவின் நாணயம். சுமார் 335-350 பொ.ச. முன்பக்கம்: கிபுனதா இடதுபுறத்தில் நின்று, பலிபீடத்தின் மேல் பலி செலுத்துகிறார். பின்பக்கம்: அர்தோக்சோ, பழங்களால் நிரப்பப்பட்டுள்ள கொம்பினை வைத்துக் கொண்டு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள்.[2]
சான்றுகள் தொகு
- ↑ 1.0 1.1 Foltz, Richard. A History of the Tajiks: Iranians of the East. பக். 66. https://books.google.com/books?id=Ff2ZDwAAQBAJ&pg=PT66.
- ↑ CNG Coins