அர்பரைட்டு
ஆர்சனேட்டு கனிமம்
அர்பரைட்டு (Arhbarite) என்பது Cu2Mg(AsO4)(OH)3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். தாமிரம் மக்னீசியம் ஆர்சனேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. மொராக்கோ நாட்டின் திரா-டபிலலெட்டு மண்டலத்திலுள்ள அவுர்சாசேட்டு மாகாணத்தின் சுரங்கத்தில் இக்கனிமம் கண்டறியப்பட்டது.[1]
அர்பரைட்டு Arhbarite | |
---|---|
சிலி நாட்டில் கிடைத்த அர்பரைட்டு | |
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | Cu2Mg(AsO4)(OH)3 |
இனங்காணல் | |
நிறம் | அடர் நீலம் முதல் நடுத்தர நீலம் வரை |
மிளிர்வு | துணை-பளபளப்பு, மெழுகுத் தன்மை |
ஒப்படர்த்தி | 3.71 |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் அர்பரைட்டு கனிமத்தை Arh[2] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Arhbarite பரணிடப்பட்டது 2019-04-06 at the வந்தவழி இயந்திரம் on mindat.org
- ↑ Warr, L.N. (2021). "IMA-CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A.
வெளி இணைப்புகள்
தொகு- Arhbarite data sheet
- Arhbarite on the Handbook of Mineralogy