அர் ஓட்சுவிம்
அர் ஓட்சுவிம் (Har Hotzvim, எபிரேயம்: הר חוצבים, பொருள். கல்வெட்டியின் மலை), மற்றும் அறிவியல்-மிகு தொழில்களின் வளாகம் (எபிரேயம்: קריית תעשיות עתירות מדע, Kiryat Ta'asiyot Atirot Mada) இசுரேலின் எருசலேமின் வடமேற்கில் அமைந்துள்ள உயர்நுட்ப தொழிற்பூங்கா ஆகும். இன்டெல், டேவா, ஆம்டாக்சு, என்டிஎசு, ஓஃபிர் ஆப்ட்ரானிக்சு, சான்டுவைன், இராடுவேர், ஐடிட்டி குளோபல் இசுரேல் போன்ற அறிவியல் சார்ந்த மற்றும் தொழினுட்ப தொழிலகங்கள் இங்குதான் அமைந்துள்ளன.[1] இத்தகையப் பெரிய நிறுவனங்களைத் தவிர ஏறத்தாழ 100 சிறு, குறு உயர்நுட்ப நிறுவனங்கள் உள்ளதோடு இப்பூங்கா தொழினுட்ப அடைகாப்பகமாகவும் விளங்குகிறது.[2] 2011இல், அர் ஓட்சுவிம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு தந்துள்ளது.[3]
ஓட்சுவிம் மலை | |
---|---|
הַר חוצבים, அர் ஓட்சுவிம் | |
இரமத் இசுலோமோவிலிருந்து அர் ஓட்சுவிம் | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 700 m (2,300 அடி) |
புவியியல் | |
அமைவிடம் | எருசலேம் |
மூலத் தொடர் | யூடிய மலைகள் |
மேற்சான்றுகள்
தொகு- ↑ "அலுவல்முறை வலைத்தளம் (ஆங்கிலம்)". Archived from the original on 2007-04-27. பார்க்கப்பட்ட நாள் 2014-08-14.
- ↑ "Biojerusalem". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2014-08-14.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-11-13. பார்க்கப்பட்ட நாள் 2008-11-13.