அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில்
வீரமாகாளியம்மன் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலாகும்.
அமைவிடம்
தொகுபுதுக்கோட்டையிலிருந்து 40 கிமீ தொலைவில், காரைக்குடி-மயிலாடுதுறை ரயில் தடத்தில் காரைக்குடியிலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது. [1] தமிழ்நாட்டிலுள்ள குறிப்பிடத்தக்க காளியம்மன் கோயில்களில் இந்த வீரமாகாளியம்மன் கோயிலும் ஒன்றாகும்.
அமைப்பு
தொகுகோயிலின் முன் விநாயகர், கருப்பர் சன்னதிகள் உள்ளன. வசந்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மூலவர் சன்னதியில் அம்மன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். சூலம், பத்மம், உடுக்கை, மழு, பாசம், கேடயம், கபாலம் ஆகியவற்றைக் கொண்டுள்ளார்.[2]
இறைவி
தொகுஇங்குள்ள இறைவி வீரமாகாளியம்மன் ஆவார். ஒரு காலத்தில் காரைக்குடிக்கு அருகில் உள்ள சூரக்குடி என்னுமிடத்தில் இந்த அம்மன் மக்களால் வழிபட்டதாகவும், பின்னர் அறந்தாங்கியிலிருந்து 2 கிமீ தொலைவிலுள்ள இவ்விடத்திற்கு வந்ததாகவும் கூறுவர். வனவாசத்தின்போது பஞ்சபாண்டவர்கள், வீரவனம் என்றழைக்கப்பட்ட அறந்தாங்கிப் பகுதிக்கு வந்து அம்மனை வணங்கியதாகவும், அவர்கள் தங்க நல்ல இடத்தை அம்மன் காட்டியதாகவும் கூறுவர்.[2]
சிறப்பு
தொகுஆடிப்பெருவிழா இக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகிறது. சுற்று வட்டார மக்கள் அனைவரின் பிரார்த்தனைத் தலமாக இந்த வீரமாகாளியம்மன் கோயில் விளங்குகிறது. [1]
திறந்திருக்கும் நேரம்
தொகுகாலசந்தி (காலை 89.00 மணி), உச்சிக்காலம் (நடுப்பகல் 12.00 மணி), சாயரட்சை (மாலை 6.00 மணி), அர்த்தசாமம் (இரவு 8.00 மணி) என்ற வகையில் நான்கு கால பூசைகள் இங்கு நடத்தப்பெறுகின்றன.இக்கோயில் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 முதல் 8.30 வரையிலும் திறந்திருக்கும். ஆடிப்பெருந்திருவிழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.[1] சித்திரை முதல் நாள், வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பெருக்கு, ஆவணி அவிட்டம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி தீபாவளி, கார்த்திகை தீபம், மார்கழி வைகுண்ட ஏகாதசி, தை மாதப் பிறப்பு, மாசி மகம், சிவராத்திரி உள்ளிட்ட விழாக்களும் கொண்டாடப்பெறுகின்றன. [2]
மேற்கோள்கள்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில் தேரோட்டம், தினமணி, 31 சூலை 2014