அறிதுயில் நிலை
அறிதுயில் நிலை, அறிதுயில் அல்லது உறக்கப்போலி (Hypnosis) என்பது மனித சுய நினைவின் ஓர் நிலையாகும். இது அவதானத்தைக் குவியப்படுத்தி, கருத்துத் தெரிவிக்கும் பதிலுக்காக அதிகரித்த கொள்திறனால் சூழல் விழிப்புணர்வு குணவியல்பு குறைத்தலுடன் தொடர்புபட்டது.[1] அறிதுயில் நிலை நடக்கும்போது என்ன நடக்கிறது என்பதை விளக்குதல் இரு வகைப்படுகிறது. மாற்றப்பட்ட நிலை கொள்கைகளின் பார்வையில், அறிதுயில் நிலை மனதின் அல்லது மெய்மறந்த நிலையின் ஓர் மாற்றப்பட்ட நிலை, சாதாரண சுய நினைவு நிலையிலிருந்து விழிப்புணர்வு வேறுபாட்டு படிநிலையால் குறிக்கப்படுகின்றதாகவுள்ளது.[2][3] வேறுவிதமாகக் கூறுவதாயின், தரமற்ற கொள்கைகள் அறிதுயில் நிலை என்பதை கற்பனைப் பாத்திரம் இயற்றிய சட்ட வடிவமாகக் காண்கின்றன.[4][5][6]
விளக்கம்
தொகுதம்முன்னால் உள்ளவர் சொல்வதை முழுமையாகச் செவியால் கேட்டு, அதனை நம்பி, அதன்படி நடக்கும் சுயவிழிப்பு அற்ற, அரை உறக்கமும் அரை விழிப்பும் கொண்ட உறக்க நிலை அல்லது துயில் நிலை இதுவாகும். இந்த செயற்கைத் துயில் நிலைக்கு, உளவசிய நிலையை என்பர். இதனை அறிதுயில் நிலை என்றும் அழைப்பர். இந்த நிலையை அடைந்த ஒருவர், விழித்திருக்கும் பொழுது, தம்முன்னால் சொல்வதை ஆராயாமல் நம்பாதவனாயிருந்த போதிலும், இந்த நிலையில் உள்ள பொழுது ஆராயும் ஆற்றலை அறவே இழந்து, தன்னிடம் பேசும் வசியக்காரன் சொற்களைக் கட்டளையாக ஏற்று, அப்படியே கீழ்ப்படிந்து நடக்கும் தன்மை உடையவனாக ஆகிவிடுகின்றான். இந்த நிலையானது, ஏதோ அபூர்வமான மந்திர வித்தை என பலர் நினைப்பது தவறாகும். அன்றாட வாழ்க்கையில், பிறர் வசியம் செய்யாமலேயே, நாம் படிக்கும் நூலிலும், கேட்கும் இசையிலும் மெய்ம்மறந்து விடுகிறோம். இதனை இத்துயில் நிலையின் வேறுபட்ட வடிவம் எனலாம்.[7]
வரலாறு
தொகுஇத்தகைய மன ஆற்றல் ஒன்று இருப்பதும், அதைப் பயன்படுத்துவதும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே பாரசீக அறிஞர்களும் இந்திய யோகிகளும் அறிந்த இருந்தனர். ஆயினும், அறிவியில் விஞ்ஞானிகள் இந்த ஆற்றல் மீது அக்கறைகொள்ளவில்லை.எனினும்,18ஆம் நூற்றாண்டில் வியன்னா நகரத்து மருத்துவர் மெஸ்மர் இந்தச் சக்தியைக்கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தியதாகக் கூறிய பொழுதுதான், மற்ற ஆய்வறிஞர்கள் உணர்ந்தனர்.[8] அதனாலேயே அந்தச் சக்தி முதலில் மெஸ்மரிசம் என்று பெயர் பெற்றது. ஆயினும் அறிவியல் அறிஞர்களின் சங்கத்தார், அவருடைய முறையைப்பற்றி விரோதமான கருத்துக் கூறியபடியால் அது கையாளப்படாமல் போயிற்று. 19ஆம் நூற்றாண்டின் இடையில் ஜேம்ஸ் பிரெய்டு என்னும் மான்செஸ்டர் உடல் மருத்துவர் அதைப் புதுப்பித்து, ஹிப்னாட்டிஸம் என்னும் பெயரில் அழைத்தார். இந்த மருத்துவர், வசியம் என்ற மனமயக்கும் நிலை ஏற்படுவதற்குக் காரணம், வசியநீர் ஆகும். வசியக்காரன் உடம்பிலிருந்து, வசியம் அடைபவன் உடம்பில் புகுவதே என்று மெஸ்மர் கூறியதை மறுத்தார். சொன்னபடி செய்யும் மன எண்ணங்களை எழுப்பும் ஆற்றல், ஒருவரின் உள்ளத்திலேயே உள்ளது என்று கூறி நிரூபித்தார். இந்த கொள்கையே,[9] வசிய ஆற்றலைக் குறித்து, பன்னாட்டு விஞ்ஞானிகளும் ஆராய்வதற்கு அடிநிலையாக அமைந்தது. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், பல மருத்துவர்கள், இந்த ஆற்றலைப் பயன்படுத்திச் சித்தக் கோளாறு நோய்களைக் குணப்படுத்தத் தொடங்கினார்கள். 1912ஆம் ஆண்டில் பிரித்தானிய மருத்துவச் சங்கத்தார், இந்த முறை மனநோய்களைப் பரிசீலனை செய்யவும், குணப்படுத்தவும் முக்கியமான ஒரு கருவியாகவும், வழிமுறையாகவும் ஏற்றுக் கொண்டனர்.
மருத்துவ முறை
தொகுதற்காலத்தில் கையாளப்படும் வசியமுறை வசியமடைய வேண்டியவனை, உறங்குவதற்கு ஏற்ற அமைதியுள்ள இடத்தில், படுக்க வைத்து, உளமருத்துவர் தன்னையோ அல்லது ஏதேனும் பளபளப்பான ஒரு பொருளையோ, இமை கொட்டாமல் பார்க்கும்படி முதலில் சொல்வார். தன் முன்னால் படுத்து இருப்பவனின் முகத்தையும் மார்பையும் மிருதுவாக வருடிக் கொண்டே, “உறங்கு-இதோ உறங்கப் போகிறாய்-இதோ உறங்குகிறாயே-ஆமாம் உறங்கியே போனாய்” என்று மிக மெதுவாகக் கூறி, துயில் நிலைக்கு, தமது நோயாளியை, அந்த துயில் நிலைக்கு ஆட்படுத்துவார். உடனே அறிதுயில் நிலை உண்டாய் விடுகிறது. இந்நிலையானது, 'விழித்துக்கொள்-எழுந்திரு' என்ற கட்டளை பிறக்கும்வரை நீடித்திருக்கும்.[10]
ஆயினும் இக்காலத்தில் நோய்களைக் குணப்படுத்த, இந்த முறையை அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. நோயின் காரணத்தைக் கண்டுபிடித்து, அதை நீக்குவதே, அறிவியல் முறையான சிகிச்சையாகும் என்பதே இதற்குரிய அடிப்படைக் காரணம் ஆகும். எனினும், நரம்புச் சம்பந்தமான கோளாறுகளையும், உறக்கமின்மை, வலி, கடல்நோய், திக்கிப் பேசுதல் போன்றவைகளையும் குணப்படுத்துவதற்கும், இம்முறை பயன்பட்டு வருகிறது.[11] பிரான்சு நாட்டிலிருந்த எமீலி கூவே என்னும் உளவியற் அறிஞர், 'பிறர் வசியம் செய்ய வேண்டியது கூட இல்லை; தம்மைத் தாமே கூட வசியம் செய்து கொண்டு, நோயையும் உள்ளச் சோர்வையும் நீக்கிக் கொள்ளலாம்' என்று கருத்தெய்துகிறார். இதனை, தன் கருத்தேற்றம் (Auto-suggestion) என்று கூறுவர்.[12]
மேற்கோள்கல்
தொகு- ↑ "New Definition: Hypnosis". Division 30 of the American Psychological Association
- ↑ Encyclopaedia Britannica, 2004: "a special psychological state with certain physiological attributes, resembling sleep only superficially and marked by a functioning of the individual at a level of awareness other than the ordinary conscious state".
- ↑ Erika Fromm; Ronald E. Shor (4 2009). Hypnosis: Developments in Research and New Perspectives. Rutgers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-202-36262-5. பார்க்கப்பட்ட நாள் 27 September 2014.
{{cite book}}
: Check date values in:|date=
(help) - ↑ Lynn S, Fassler O, Knox J; Fassler; Knox (2005). "Hypnosis and the altered state debate: something more or nothing more?". Contemporary Hypnosis 22: 39. doi:10.1002/ch.21.
- ↑ Coe W, Buckner L, Howard M, Kobayashi K; Buckner; Howard; Kobayashi (1972). "Hypnosis as role enactment: Focus on a role specific skill". The American journal of clinical hypnosis 15 (1): 41–5. doi:10.1080/00029157.1972.10402209. பப்மெட்:4679790. https://archive.org/details/sim_american-journal-of-clinical-hypnosis_1972-07_15_1/page/41.
- ↑ Steven J. Lynn; Judith W. Rhue (4 October 1991). Theories of hypnosis: current models and perspectives. Guilford Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89862-343-7. பார்க்கப்பட்ட நாள் 30 October 2011.
- ↑ https://science.howstuffworks.com/science-vs-myth/extrasensory-perceptions/hypnosis1.htm
- ↑ http://www.hypnosis.com/whatishypnosis_history.php
- ↑ https://lifestyle.inquirer.net/287510/is-mesmerism-the-same-as-hypnotism/
- ↑ https://britishhypnosisresearch.com/hypnosis-techniques/
- ↑ https://www.apa.org/topics/hypnosis/media
- ↑ https://www.ukhypnosis.com/art-autosuggestion-remarks-selfhypnosis/