பாரசீகதேசம்

பாரசீகதேசம் பர்பரதேசத்திற்கு மேற்கிலும்,காந்தாரதேசத்திற்கும்,கிராததேசத்திற்கும் தென்மேற்கிலும், சமமான பூமியாய் மிகவும் அகன்று பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்

தொகு

இந்த தேசம் சரியான வெப்பத்தையும், குளிரையும் எப்பொழுதும் அடையாமல் ஒரேவிதமான குளிர்காற்று வீசுவதால் இங்குள்ளோர் வெண்மை நிறத்தவர்களாக இருப்பார்கள்.[2]

மலை, காடு, விலங்குகள்

தொகு

இந்த தேசத்திற்கு தெற்கில் மகாமலைத் தொடரும், வடக்கில் கிராத பெருமலையும், கிழக்கில் பர்பரதேச மலையும் உள்ளது. இந்த தேசத்தின் வடக்கில் சீமாமலை என்ற மலையும் உண்டு. இத்தேசத்தின் காடு|காடுகளில் பச்சைக்கிளி, பஞ்சவர்ணக்கிளி, குயில், மயில், சிறுகுருவி, ஊர்க்குருவி ஆகியவையும், உயர்சாதிக்குதிரையும், யானைகளும் அதிகம் உண்டு. பச்சைமரகதகற்களும், கோமேதகக் கற்களும்,மலைச்சாரள்களில் கிடைக்கிறது.

நதிகள்

தொகு

இந்த பாரசீகதேசத்திற்கு ரதசித்ரை என்ற நதி இந்த தேசத்தை செழிக்க வைத்து கிழக்குமுகமாய் ஓடி பர்பரதேசத்தின் மேற்கு மலையில் உள்ள ஒரு ஏரியில் இணைகிறது.

விளைபொருள்

தொகு

இந்த தேசத்தில் தேக்கு, பலா, பிரம்பு, திந்துகம், பூர்சரம் முதலியன அதிகமாய் விளைகிறது.

கருவி நூல்

தொகு

சான்றடைவு

தொகு
  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 177 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரசீகதேசம்&oldid=2076842" இலிருந்து மீள்விக்கப்பட்டது