கிராததேசம்

கிராததேசம் காசுமீரதேசத்திற்கு நேர்தெற்கிலும்,சிந்துநதியின் மேற்குக் கரையில் சதுரமான சமமான பூமியாய் பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்

தொகு

இந்த தேசத்தின் பெரும்பாகங்களில் சமவெளி இல்லாமலும், சற்று உயர்ந்தும், கொஞ்சம் தாழ்ந்தும், ஆழமான நீரோடைகளும், சமமான, மட்டமான பூமியே அதிகமாக இருக்கும்.[2]

மலை, காடு, விலங்குகள்

தொகு

இந்த தேச பூமியானது அடர்ந்த காடுகளாலும், பெரியமலைகளினாலும், சூழப்பட்டுள்ளதால், இத்தேசத்தின் காடுகளில் புலி, சிங்கம், கரடி, குரங்கு, மலைப்பாம்பு முதலிய காட்டு விலங்குகளும், காட்டு ஆடுகளும் அதிகம் உண்டு.

நதிகள்

தொகு

இந்த கிராததேசத்திற்கு சிந்துநதி வடக்கிலிருந்து தெற்குமுகமாய் ஓடி இந்த தேசத்தை செழிக்க வைத்து மேற்குமுகமாய் ஓடி, பிறகு காசுமீரதேசத்தின் வடகிழக்கில் இறங்கி, காந்தாரதேசத்தின் கிழக்கு பூமியில் ஓடி மேற்கு கடலில் இணைகிறது.

விளைபொருள்

தொகு

இந்த தேசத்தில் தங்கம், வெள்ளி, தாமிரம், திந்துகம், பூர்சரம் முதலியன உலோகங்களை தோண்டி எடுக்கும் பணிகளையே அதிகம் செய்கின்றனர்..

கருவி நூல்

தொகு

சான்றடைவு

தொகு
  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 181 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராததேசம்&oldid=2943665" இலிருந்து மீள்விக்கப்பட்டது