அறிவியல் தமிழ் அமைப்புகள்
அறிவியல் தமிழ் அமைப்புகள் என்பவை பல்வேறு வழிகளில் அறிவியலையும் அறிவியல் தமிழையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்படும் அமைப்புகள் ஆகும். அறிவியல் தகவல்களை தமிழில் மக்களிடம் எடுத்துச் செல்லல், அறிவியல் மனப்பார்மையை வளர்த்தல், அறிவியல் தமிழை வளர்த்தல், அறிவியல் கல்வியை தமிழில் தருவதை ஊக்குவித்தல் எனப் பல்வேறு நோக்களோடு இந்த அமைப்புகள் செயற்படுகின்றன.
பணிகள்
தொகு- தமிழ்வழிக் கல்வியை, தமிழ்வழி அறிவியல் கல்வியை ஊக்குவித்தல்
- இதழ்கள் நூல்கள் ஆய்வேடுகள் வெளியிடுதல்
- அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் வெளியிடுதல்
- அறிவியல் தமிழ் நூலடைவுகள் வெளியிடுதல்
- தமிழில் அறிவியல் செய்திகளைப் பரப்புதல்
- தமிழில் அறிவியல் ஆய்வுகளைச் செய்தல்
- மாநாடுகள், கருத்தரங்குகள், விரிவுரைகளை நடத்துதல்
- அறிவியல் நடுவங்கள் நிறுவிச் செயற்பட வைத்தல்
- மாணவர்களுக்கான அறிவியற் பரிசோதனைப் போட்டிகள் வைத்தல்
- கலைச்சொல்லாக்கம்
- மொழிபெயர்ப்பாக்கம்
- தமிழ் மொழியை நவீன ஊடகங்களில் பயன்படுத்துவதை ஏதுவாக்கல்
- பொதுமக்களிடையே, மாணவரிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல்
பட்டியல்
தொகு- அறிவியல் தமிழ் மன்றம்
- தஞ்சைப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ்த் துறை
- தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
- அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம்
- பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்
- சுதேசி விஞ்ஞான இயக்கம் [1]
- தமிழக அறிவியல் பேரவை
- வளர்தமிழ் மன்றம்
- உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்
- சுதேசி அறிவியல் இயக்கம் (குன்றக்குடி)
- மக்கள் அறிவியல் இயக்கம் (கோவை) [2]
- உலக தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை
- அறிவியல் தமிழ் அறக்கட்டளை