தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்(Tamilnadu Science Forum) அல்லது தமிழ்நாடு மக்கள் அறிவியல் இயக்கம் என்பது தமிழ்நாட்டில் அறிவியலை பரப்பும் நோக்கத்தைக் கொண்டு கடந்த 39 ஆண்டுகளுக்கு மேலாகச் செயற்படும் அமைப்பு ஆகும். இது அறிவியலாளர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள், மாணவர்கள் எனப் பலதரப்பட்டோரையும் உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. 1980 ஆண்டு முதல் ‘‘அறிவியல் மக்களுக்கே’’ என்ற முத்திரை வாசகத்துடன் இயங்கிவரும் அமைப்பு. இதில் விஞ்ஞானிகள், பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், மருத்துவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள்,பெண்கள் மற்றும் மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு இருபத்து எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் ஓர் தன்னார்வ அமைப்பாகும். இந்த அமைப்பு "அறிவியல் பிரச்சாரத்தில்" முக்கியப் பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொதுச் சுகாதாரம் உட்படப் பல வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் | |
---|---|
குறிக்கோளுரை | அறிவியல் மக்களுக்கே |
வகை | தன்னார்வ நிறுவனம் |
தலைவர் | முனைவர் எஸ்.தினகரன் |
பொதுச் செயலாளர் | எஸ்.சுப்பிரமணி |
வலைத்தளம் | www |
அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் (AIPSN) உறுப்பினராகவும்[1] உள்ளது.
நடைபெற்று வரும் பணிகள்
தொகுகடந்த 31 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை[2], ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது.
அறிவியல் வெளியிடுகள்
தொகு- தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், புதுவை அறிவியல் இயக்கமும் இணைந்து கடந்த 27 வருடங்களாக துளிர் எனும் சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழை நடத்தி வருகின்றன.
- அறிவியல் முரசு என்ற மாத இதழ் அறிவியல் இயக்க உறுப்பினர்களுக்காக நடத்தப்பட்டு வருகின்றது.
- பெண்களுக்காக "சமம்" செய்தி மடல் இருமாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்பட்டு வருகிறது.
- புதுவை அறிவியல் வெளியீடுகள் என்ற பெயரில் பல்வேறு அறிவியல் புத்தகங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
- ஆங்கிலத்தில் சிறுவர்களுக்காக ஜந்தர் மந்தர் (Jantar Mantar) என்ற அறிவியல் இதழை வெளியிடுகிறது.
- அறிவு தென்றல் என்ற அறிவியல் இதழை வெளியிடுகிறது.
- விஞ்ஞான சிறகு என்ற அறிவியல் இதழை வெளியிடுகிறது.
- விழுது என்ற அறிவியல் இதழை வெளியிடுகிறது.
இதையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "NCSTC-network communicating Science in India". ncstc-network. 2010. பார்க்கப்பட்ட நாள் 2013-12-19.
- ↑ "Children's Science Congress". ncstc-network. 2010. Archived from the original on 2013-05-25. பார்க்கப்பட்ட நாள் 2013-12-19.