அறுபீனைல்பென்சீன்

வேதிச் சேர்மம்

அறுபீனைல்பென்சீன் (Hexaphenylbenzene) C42H30 என்ற மூலக்கூற்றுவாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. அரோமாட்டிக் சேர்மமான இது ஒரு பென்சீன் வளையத்தில் ஆறுபீனைல் வளையங்கள் பதிலீடு செய்யப்பட்டு உருவாகிறது. அறுபீனைல் பென்சீன் நிறமற்றதாகவும் வெண் திண்மமாகவும் காணப்படுகிறது. இந்த சேர்மமானது ஆறு அரைல் பென்சீன் என்ற ஒரு பரந்த வகுப்பின் பெற்றோர் உறுப்பினராகவும் கருதப்படுகிறது. ஆறு அரைல்பென்சீன் வகுப்பு சேர்மங்கள் முக்கியமாக கோட்பாட்டு ஆர்வம் கொண்டவையாகும்.

அறுபீனைல்பென்சீன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
23,24,25,26-டெட்ராபீனைல்-11,21:22,31-டெர்பீனைல்
வேறு பெயர்கள்
எக்சாபீனைல்பென்சீன்
இனங்காட்டிகள்
992-04-1 Y
ChemSpider 63611 Y
InChI
  • InChI=1S/C42H30/c1-7-19-31(20-8-1)37-38(32-21-9-2-10-22-32)40(34-25-13-4-14-26-34)42(36-29-17-6-18-30-36)41(35-27-15-5-16-28-35)39(37)33-23-11-3-12-24-33/h1-30H Y
    Key: QBHWPVJPWQGYDS-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C42H30/c1-7-19-31(20-8-1)37-38(32-21-9-2-10-22-32)40(34-25-13-4-14-26-34)42(36-29-17-6-18-30-36)41(35-27-15-5-16-28-35)39(37)33-23-11-3-12-24-33/h1-30H
    Key: QBHWPVJPWQGYDS-UHFFFAOYAG
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 70432
  • c1cc(ccc1)c3c(c(c(c(c3c2ccccc2)c4ccccc4)c5ccccc5)c6ccccc6)c7ccccc7
பண்புகள்
C42H30
வாய்ப்பாட்டு எடை 534.70 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
உருகுநிலை 454 முதல் 456 °C (849 முதல் 853 °F; 727 முதல் 729 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

பென்சோபீனோன் அல்லது வேறு உயர் வெப்பநிலை கரைப்பானில் டெட்ராபீனைல்வளையபெண்டாடையீனோன் மற்றும் இருபீனைலசிட்டிலீன் ஆகியவற்றை சூடாக்குவதன் மூலம் அறுபீனைல் பென்சீன் தயாரிக்கப்படுகிறது. டையீல்சு-ஆல்டர் வினையின் மூலம் அறுபீனைல்டையீனோன் பெறப்பட்டு வேதி வினை தொடர்கிறது. கார்பன் ஓராக்சைடு நீக்கப்படுகிறது. [1]

 

1,2,3,4-டெட்ராபீனைல்நாப்தலீன் உடன் இருபீனைல் அசிட்டிலீனைச் சேர்த்து குரோமிய வினையூக்கியின் முன்னிலையில் சில்படிகமாக்கல் நிகழ்ந்து அறுபீனைல்பென்சீன் கிடைக்கிறது.[2]

கட்டமைப்பு

தொகு
 
பீனைல் வளையங்களின் சுழற்சியைக் காட்டும் அறுபீனைல்பென்சீனின் படிகக் கட்டமைப்பு கண்ணோட்டக் காட்சி. தெளிவுக்காக ஐதரசன் அணுக்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. [3]

இந்த மூலக்கூறின் நிலையான இணக்கமானது, மத்திய பென்சீன் வளையத்தின் தளத்திலிருந்து சுழலும் பீனைல் வளையங்களைக் கொண்டுள்ளது. இப்பீனைல் வளையங்கள் 65° கோணத்தில் சுழல்கின்ற மூலக்கூறு உந்துவிசை போன்ற இணக்கத்தை ஏற்றுக்கொள்கின்றன. [3] வாயு நிலையில் இருக்கும் போது, அவை சில சிறிய அலைவுகளுடன் செங்குத்தாக இருக்கின்றன. [4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Louis Fieser (1966). "Hexaphenylbenzene". Organic Syntheses 46: 44. doi:10.15227/orgsyn.046.0044. 
  2. W. Herwig, W. Metlesics, H. Zeiss (1959). "π-Complexes of the Transition Metals. X. Acetylenic π-Complexes of Chromium in Organic Synthesis". J. Am. Chem. Soc. 81 (23): 6203–6207. doi:10.1021/ja01532a024. 
  3. 3.0 3.1 Bart, J. C. J. (1968). "The crystal structure of a modification of hexaphenylbenzene". Acta Crystallographica Section B 24 (10): 1277–1287. doi:10.1107/S0567740868004176. http://journals.iucr.org/b/issues/1968/10/00/a06258/a06258.pdf. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. Gust, D. (1977). "Restricted Rotation in Hexaarylbenzenes". J. Am. Chem. Soc. 99 (21): 6980–6982. doi:10.1021/ja00463a034. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறுபீனைல்பென்சீன்&oldid=3373346" இலிருந்து மீள்விக்கப்பட்டது