அற்புதத் தீவு (திரைப்படம்)

(அற்புதத் தீவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அற்புதத் தீவு 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் மணிவண்ணன், பிருத்விராஜ், கருணாஸ் மற்றும் வையாபுரி உட்படப் பல நடிகர்களுடன் பல குள்ளமானவர்களும் நடித்துள்ளனர்.

அற்புதத் தீவு
நடிப்பு
மணிவண்ணன் ,
பிருத்விராஜ் ,
கருணாஸ்,
வெளியீடு2006
மொழிதமிழ்

திரைக்கதைதொகு

கிருஷ்ணரின் தசாவதாரத்தில் ஒன்றான வாமனர் அவதாரத்தில் எவ்வாறு கடவுள் கிருஷ்ணர் குள்ளமாக அவதாரம் எடுத்தாரோ அவ்வாறே இங்கும் வாமனபுரித்தீவில் கந்தர்வனின் சாபத்தால் ஆண்கள் குள்ளமாக உள்ளனர். இத்தீவிற்கு உலங்கு வானூர்தியில் (ஹெலிகாப்டர்) ஊடாக அந்தமான் தீவுக்குச் சென்று கொண்டிருந்தவர்கள் விபத்துக்குள்ளாகியதால் நீந்தி வாமானதீவை அடைகின்றனர். உயரமான ஆண்களை பிசாசுகளாகப் பார்க்கும் பழக்கமுள்ள வானபுரித்தீவில் இருவர் நீந்திக் கரைசேர்கையில் ஈட்டி மூலம் கொல்லப்பட்டுத் தலைகீழாகத் தொங்க விடப்படுகின்றனர். இவ்வாறு இருக்கையில் நீந்திக் கரைசேர்ந்தவர்களில் ஒருவன் இளவரசியைக் கண்டு இதயத்திலும் இடம்பிடித்து சிக்கல்களை எதிர்கொண்டு இறுதியில் ஒன்று சேர்கின்றனர்.

வெளியிணைப்புக்கள்தொகு