அலமிக்களி
அலமிக்களி (Alamikkali) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவின் மங்களூரிலும், கேரளாவின் காசர்கோட்டின் சில பகுதிகளிலும் நடைபெறும் ஒரு நாட்டுப்புற விழாவாகும். இந்த திருவிழா இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களின் மத ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. [1][2][3]
முஸ்லீம் வரலாற்றில் ஒரு முக்கியமான அத்தியாயமான கர்பலா போரின் நினைவுச்சின்னமாக இந்த திருவிழா முஃகர்ரம் அன்று கொண்டாடப்படுகிறது. அதே போன்று கொண்டாட்டங்கள் அலமிக்களி பண்டிகையிலும் பின்பற்றப்படுகிறது. [4]
சுடர்த் திருவிழா
தொகுஇமாம் ஹுசைன் தலைமையில் முஸ்லிம்கள் எதேச்சதிகார ஆட்சியாளர் முதலாம் யசீத்துக்கு எதிராக போராடினர். அந்த போரில் எதிரிகளின் இராணுவத்தை பயமுறுத்துவதற்காக உசேனின் இராணுவம் கருப்பு ஆடை அணிந்திருந்தது. இந்த நடனத்தில் அணியப்படும் உடையும் இதை நினைவுபடுத்துகிறது. போர்ச் சமயத்தில் உசேனின் இராணுவம் நீருக்காக அலைந்தது. யாசித்தின் இராணுவம் அருகிலுள்ள கிணற்றைச் சுற்றி தீ வைத்து அவர்களுக்கான நீரை தடுத்தது. இந்த நிகழ்வுகள் அலமிக்களியில் நினைவுகூரப்படுகின்றது. அலமிக்களியின் இறுதி விழாவில் தீக் குழி தயார் செய்து கரி மீது படுத்துக் கொள்வது என்பது ஒரு முக்கிய நிகழ்வாகும். போர்க்களத்தில் உயிர் இழந்த படையினருக்கு மரியாதை செய்வதற்காக இது செய்யப்படுகிறது. [5]
போரின் முடிவில், உசேன் கொடூரமாக கொல்லப்பட்டார். அவரது உடல் துண்டுகளாக வெட்டப்பட்டது. இறுதி சடங்கில், உசேனின் கைகளை புதைப்பது மிகவும் கடினமாக இருந்தது. அவர்கள் முயன்றாலும், கைகளை மூடுவது சாத்தியமில்லை. கடைசியில் அவரது எதிரிகள் பாதி உடலை மட்டும் மூடினர். அலமிக்களியின் முக்கிய நிகழ்வான 'வெளிக்கரம்' இதனை நினைவு படுத்துகிறது. [6]
வரலாறு
தொகுகாசர்கோடு மாவட்டத்தின் காஞ்ஞங்காடு அருகே அமைந்துள்ள அலமிப்பள்ளி என்ற ஊரில் அலமிக்களி முக்கியமாக நிகழ்த்தப்படுகிறது. அலமிப்பள்ளியைத் தவிர, முஸ்லிம் குடும்பங்கள் அதிகம் அஜனூர், கோட்டிகுளம், காசர்கோடு ஆகிய பகுதிகளிலும் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆனாலும் பிரதான கொண்டாட்டங்கள் அலமிப்பள்ளியிலேயே நிகழ்த்தப்படுகிறது. ஆனலும் இங்கே பள்ளிவாசல் என்பது இல்லை. மாறாக, நெருப்பு குழியின் வடிவத்தில் ஒரே ஒரு கல் மட்டுமே உள்ளது. இந்துஸ்தானி மொழிகள் பேசும் ஹனெபி பிரிவின் முஸ்லிம்கள் இவ்விழாவை ஏற்பாடு செய்து வழிநடத்துகிறார்கள்.
திப்பு சுல்தானின் முற்றுகையின் போது துருக்கியர்கள் இப்பகுதிக்குச் வந்தனர். அவர்கள் புத்தியகோட்டாவைச் சுற்றியிருந்த (புதிய கோட்டை, காஞ்ஞங்காட்டின் மற்றொரு இடம்) கோட்டையின் உள்ளே தங்கினர். அவர்கள் துருக்கியர்கள் மற்றும் சாஹிப் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் அலமபள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ ஆரம்பித்தனர். பின்னர் துருக்கியர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடினார்கள், அவர்களில் பலர் துருக்கிக்கு திரும்பினர். குடும்பத்தில் ஒரு உறுப்பினர் எச்சிக்கானத்தில் உள்ள நில உரிமையாளரின் காவலராக இருந்தார். இந்த குடும்பத்திலிருந்தே, கடைசி அலமிக்களியை ஏற்பாடு செய்து நடத்திய இரசூல் சாகிப் உள்ளிட்ட தொடர்ச்சியான பக்கீர் சாகிப்கள் வருகிறார்கள். [7]
கலாச்சாரம்
தொகுஅலமி பாத்திரத்தை இந்து மதத்தவர்கள் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் உடலில் கரியைப் பூசிக்கொண்டு அதில் வெள்ளை புள்ளிகளை பயன்படுத்த்துகிறார்கள். அவர்கள் கழுத்தில் பூக்கள் மற்றும் இலைகளுடன் சங்கிலிகளை அணிந்துகொண்டு மீசையையும் தாடியையும் முண்டாவின் இழைகளால் அலங்கரிக்கின்றனர். அவர்கள் தங்கள் இடுப்பில் வேட்டியையும் தலையில் ஒரு தொப்பியையும் அணிந்திருப்பர். கிராமங்களில், அலமிகள் குழுக்களாகச் செல்வதுடன், ஒவ்வொரு குழுவிலும் ஐந்து அல்லது ஆறு உறுப்பினர்கள் இருந்தனர்.
மணிகள் மற்றும் குச்சிகளைப் பயன்படுத்தி உரத்த ஒலிகளை எழுப்புவதன் மூலம் அவை பெருகிய கொண்டாட்டத்துடன் நகர்கின்றன. ஒரு ஆழமான அடிப்பகுதி கொண்ட பாத்திரத்துடன் ஒரு பணப்பை கொண்டு செல்லப்படுகிறது. இந்த் சமயத்தில் அலமிகள் ஒருபோதும் காலணிகளை அணிய மாட்டார்கள். அவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் பிச்சை கேட்கிறார்கள். பணப்பையை கீழே வைத்த பிறகு அவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் முன்னால் தாளத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல் நடனமாடுகிறார்கள். அலமிக்களியின் பாடல்களுக்கு தனித்துவமான தொனியும் வசனமும் உண்டு; "லாசோலேமா ... லாசோ ... லேமா ... லேமா ... லேமலோ ..." என்பது ஒவ்வொரு பாடலின் முதல் மற்றும் கடைசி வரியாக அமையும். உரையாடல்களும் பாடல்களின் வடிவத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளன. [8]
மேற்கோள்கள்
தொகு- ↑ [https://www.keralatourism.org/malabar/alamikkali/16
- ↑ [https://tv.mathrubhumi.com/en/news/kerala/kerala-school-arts-fest-learn-about-alamikkali-kanhangad-s-native-art-form-1.33448
- ↑ [http://www.tourismnewslive.com/2018/12/21/tour-with-shailesh-alamikali-a-lost-tradition-of-kasargod/
- ↑ Department of Tourism, Government of Kerala Site
- ↑ Mathrubhumi News
- ↑ Tourism News
- ↑ Department of Tourism, Government of Kerala
- ↑ "Alamikkali conducted as a part of the campaign - kerala.gov.in". Archived from the original on 2022-04-02. பார்க்கப்பட்ட நாள் 2021-03-30.