அலர்மேல் வள்ளி
அலர்மேல் வள்ளி (Alarmel Valli) (பிறப்பு: 14 செப்டம்பர் 1956) ஓர் இந்தியச் செவ்வியல் நடனம் ஆடுநரும், நடன அமைப்பாளரும், இந்தியச் செவ்வியல் நடனமாகிய பரத நாட்டியத்தின் பந்தநல்லூர் பாணியில் தேர்ந்த வல்லுனரும், தனக்கெனத் தனி நாட்டியப் பாணியைப் பின்பற்றுபவரும் ஆவார்.[1][2]
அலர்மேல் வள்ளி Alarmel Valli | |
---|---|
பிறப்பு | 14 செப்டம்பர் 1956 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | இந்தியச் செவ்வியல் நடனக் கலைஞர், நடன அமைப்பாளர் |
அறியப்படுவது | பந்தநல்லூர் பாணி, பரதநாட்டியம் |
வாழ்க்கைத் துணை | பாசுகர் கோழ்சு |
வலைத்தளம் | |
www |
இவர் சென்னையில் தீபக்சிகா எனும் நுண்கலை மையத்தை 1984 இல் நிறுவினார். இங்கே இவர் பரத நாட்டியத்தைப் பயிற்றுவிக்கிறார்.[3]
வைஜயந்திமாலாவுக்குப் பிறகு 1991 இல் இரண்டாவதாக குடியரசு தலைவரிடம் பத்ம சிறீ பட்டம் பெற்ற மிக இளைய நடனக் கலைஞர் இவர். இவர் 2001 இல் இசை, நடனம், நாடகத்துக்கான தேசியக் கல்விக்கழகமாகிய சங்கீத நாடகக் கல்விக்கழக விருதைப் பெற்றார்.[4] இவர் 2004 இல் இந்திய அரசின் பத்ம பூசன் விருதைப் பெற்றார்.[5]
இளமை
தொகுஅலர்மேல் வள்ளி சென்னையில் பிறந்து வளர்ந்தார். இவர் தன் பள்ளிக் கல்வியைச் சென்னை, சர்ச் பார்க்கில் உள்ள புனித இருதய பதின்மநிலைப் பள்ளியில் பெற்றார். பின்னர், இவர் இசுடெல்லா மேரி கல்லூரியில் பயின்றுள்ளார். இவ பந்தாநல்லூர் சொக்கலிங்கம் பிள்ளையிடமும் அவரது மகனாகிய சுப்பராய பிள்ளையிடமும் பரத நாட்டியத்தில் பந்தநல்லூர் பாணியைப் பயின்றார். இவர் டி. முக்தாவிடம் பல ஆண்டுகளாக வீணா தனம்மாள் பாணி இசையைப் பயின்றார்.[6]
வாழ்க்கைப்பணி
தொகுஇவர் தன் ஒன்பதரையாம் அகவையில் சென்னை இந்திய நுண்கலை நிறுவனத்தில் நடனஅரங்கேற்றம் செய்து நாட்டியக் கலா பூழ்சன் விருதைப் பெற்றுள்ளார். இவர் தன் பதினாறாம் அகவையில் பாரீசில் பெருமைபெற்ற சாரா பெர்னார்டித் தியேட்டர் தெ லா வில்லியில் நடந்த பன்னாட்டு அரங்கத்தின் நடன விழாவில் நடனம் ஆடி வெற்றிபெற்றுப் பன்னாட்டளவில் பெரும்புகழ் பெற்றார். பின்னர் தொடர்ந்து நடனக் கலைஞராகத் திகழ்ந்து வருகிறார்,[7][8] both in India and aboard.[9]
இவர் குரு கேலுசரண் மகாபத்ராவிடமும் அவரது மாணாக்கராகிய குரு இரமணிரஞ்சன் சேனாவிடமும் ஒடிசி நடனக் கலையைப் பயின்றார். இவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களாகிய சங்க இலக்கியக் கவிதைத் தொகுப்புகளைப் பயின்றுள்ளார். பல ஆண்டுகளாக இவர் படிப்படியாக செவ்வியல் பரத நாட்டிய நடன மரபை விரிவுபடுத்திய தனக்கே உரிய தனிப்பாணியைக் கைவரப் பெற்றார்.[6]
பெற்ற விருதுகள்
தொகு- 1969:இந்திய நுண்கலை கழகத்தின் நாட்டியக் கலா பூழ்சனம் விருது.
- 1973:மும்பை சூர் சிங்கார் சம்மேளனத்தின் ‘சிங்கர் மணி’ விருது.
- 1975:சென்னை கலாநிகேதன் அமைப்பின் நிருத்தியசோதி விருது
- 1976:சிதம்பரம் தேவத்தனத்தின் பாரதகலா தத்துவப் பிரகாசினி
- 1979: தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது
- 1980: மும்பை சூர் சிங்கார் சம்மேளனத்தின் நிருத்திய விகாசு விருது
- 1985: சென்னை கிருழ்சின கான சவையின் நிருத்திய சூடாமணி விருது.
- 1990: அமெரிக்கா, நியூசெர்சி, தமிழ்நாடு அறக்கட்டளை ஆடல் அரசி விருது
- 1991: பத்ம சிறீ[10]
- 1996: சந்திகார் நகர பிரச்சீன் கலா கேந்திர நிருத்திய ஊர்வசி விருது
- 1997: பாரீசு நகர கிராந்தே மேதைல்லி விருது
- 2002: சங்கீத நாடக கல்விக்கழக விருது[4]
- 2003: சென்னை இலலித கலா வேதிக அறக்கட்டளைத் தகைமை
- 2003: கோயம்புத்தூர் பாரதீய விதயா கேந்திர நிருத்திய இரத்தினம் விருது
- 2004: பத்ம பூழ்சன்
- 2004: பிரெஞ்சு அரசின் செவாலியே விருது பெற்றவர்[2][11]
- நாட்டிய கலா ஆச்சார்யா, 2015; வழங்கியது: மியூசிக் அகாதமி, சென்னை[12]
மக்கள் பண்பாட்டில்
தொகுமைக்கெல் மெசிந்தயர் அலர்மேல் வள்ளி திரைப்படத்தை பிரித்தானிய ஒலிபரப்பு அலைவரிசை ஒன்றின் ஒன்றியப் பேரரசு தொலைக்காட்சிப் பெஉந்தொடருக்காக எடுத்தார். பிரித்தானிய ஒலிபரப்பு நிறுவனத்தின் ஆன்மீக ஆசியா தொடருக்காகவும் நெதர்லாந்து ஒலிபரப்புக் குழுமத்துக்காகவும் பிரான்சுக் கலைக்குழுமத்துக்காகவும் யப்பானியத் தேசிய தொலைக்காட்சிக்காகவும் இந்தியத் தயாரிப்பாளர்கள் க. அரவிந்தன், பிரகாசு ஜா ஆகியோர் எடுத்த திரைப்பட ஆவணங்களில் அலர்மேல் வள்ளி நடனம் ஆடி நடித்துள்ளார்.
இந்தியத் தேசிய ஆவணப் படங்களுக்காக இந்தியத் திரைப்படப் பிரிவு அலர்மேல் வள்ளியின் திரைப்படம் ஒன்றை பிரவாகி எனும் பெயரில் எடுத்துள்ளது. இதை சிறந்த இந்திய திரைப்படத் தயாரிப்பாளராகிய அருண் கோப்கார் திரைப்படவியலாளரான மது அம்பத்தைக் கொண்டு இயக்கியுள்ளார். இலசிய காவ்யா எனும் அலர்மேல் வள்ளியின் ஆவணப்படம் ஒன்று சிறந்த கலை/பண்பாட்டுத் திரைப்படத்துக்கான தேசிய விருதை பெற்றது.
சொந்த வாழ்க்கை
தொகுஅலர்மேல் வள்ளி, இந்திய ஆட்சியியல் அலுவலராகிய பாசுகர் கோழ்சுவை மணந்தார்..[13]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sparkling show of style: There was never a dull moment in Alarmel Valli's performance.". தி இந்து. 7 January 2009 இம் மூலத்தில் இருந்து 4 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110604113030/http://www.hindu.com/ms/2009/01/07/stories/2009010750040300.htm.
- ↑ 2.0 2.1 "The best of music and dance". Express Buzz. 9 January 2010 இம் மூலத்தில் இருந்து 18 May 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120518002640/http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=The+best+of+music+and+dance&artid=5zAjSCeiICE=&SectionID=lMx/b5mt1kU=&MainSectionID=lMx/b5mt1kU=&SEO=&SectionName=tm2kh5uDhixGlQvAG42A/07OVZOOEmts.
- ↑ "Transcending barriers: Alarmel Valli on the language of dance". இந்தியன் எக்சுபிரசு. 2 October 2008. http://www.indianexpress.com/news/transcending-barriers-alarmel-valli-on-the-language-of-dance/368596/0.
- ↑ 4.0 4.1 "Archived copy". Archived from the original on 17 February 2012. பார்க்கப்பட்ட நாள் 2011-12-04.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Padma Bhushan Awardees". Ministry of Communications and Information Technology. Archived from the original on 5 June 2009. பார்க்கப்பட்ட நாள் 28 June 2009.
- ↑ 6.0 6.1 Alarmel Valli Biography[தொடர்பிழந்த இணைப்பு], keralawomen.gov.in; accessed 13 May 2017.
- ↑ "Art is where the heart is ...". தி இந்து. 18 September 2009. http://www.thehindu.com/features/friday-review/dance/article21978.ece.
- ↑ "Natural and poetic". தி இந்து. 6 January 2010. http://www.thehindu.com/features/friday-review/dance/article75804.ece.
- ↑ Jack Anderson (23 June 1991). "Review/Dance; Indian View Of Humanity And Divinity". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/1991/06/23/arts/review-dance-indian-view-of-humanity-and-divinity.html?pagewanted=1.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "`Dancing takes me places'". தி இந்து. 13 April 2004 இம் மூலத்தில் இருந்து 10 ஜூன் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100610060229/http://www.hinduonnet.com/thehindu/mp/2004/04/13/stories/2004041300200100.htm.
- ↑ "Alarmel Valli conferred Natya Kala Acharya title". The Hindu. 4 சனவரி 2016. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/alarmel-valli-conferred-natya-kala-acharya-title/article8062861.ece?ref=sliderNews. பார்த்த நாள்: 4 சனவரி 2016.
- ↑ "Hindi theatre is in a sad mess". The Hindu இம் மூலத்தில் இருந்து 7 செப்டம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120907162436/http://www.hindu.com/mp/2005/09/10/stories/2005091000210400.htm. பார்த்த நாள்: 18 February 2012.