ஆலம்கீர்பூர்
ஆலம்கீர்பூர் (இந்தி: अलाम्गिरपुर), இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மீரட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தொல்லியல் களம். இது சிந்து நதிக் கரையோரத்தில் செழிப்புற்று விளங்கிய சிந்துவெளி நாகரிகத்தின் (கி.மு 3300–1300) ஒரு பகுதி.[1][2] இவ்விடம் சிந்துவெளி நாகரிகப் பகுதியில் கிழக்கு அந்தலையில் உள்ளது.[3]
ஆலம்கீர்பூர் | |
---|---|
தொல்லியல் களம் | |
நாடு | இந்தியா |
மாகாணம் | உத்தரப் பிரதேசம் |
நேர வலயம் | ஒசநே+5.30 (இந்திய சீர் நேரம்) |
அகழ்வாய்வுகள்
தொகுஇந்தியத் தொல்லியல் ஆய்வகம் 1958, 1959 ஆம் ஆண்டுகளில் இவ்விடத்தில் ஒரு பகுதி ஆய்வை மேற்கொண்டது.[2] இவ்விடத்தில் ஒவ்வொன்றுக்கும் இடையில் இடைவெளிகளோடுகூடிய நான்கு பண்பாட்டுக் காலப் பகுதிகள் இருப்பதை அகழ்வாய்வு எடுத்துக்காட்டியது. இவற்றுள் காலத்தால் முந்தியது 6 அடி தடிப்புக் கொண்டது. இது அரப்பா நாகரிகக் காலத்துக்குரியது.[4] இப்பகுதியில், சூளையில் சுட்ட செங்கற் தடயங்கள் இருந்தபோதும், இக்காலத்துக்குரிய கட்டிட அமைப்புக்கள் எதுவும் காணப்படவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டதே அமைப்புக்கள் கண்டுபிடிக்கப்படாததற்கான காரணமாக இருக்கக்கூடும்.[4] இங்கு கிடைத்த செங்கற்கள், 11.25 அங். முதல் 11.75 அங். வரையிலான நீளமும், 5.25 அங். முதல் 6.25 அங். வரையிலான அகலமும், 2.5 அங். முதல் 2.75 அங் வரையிலான தடிப்பும் கொண்டவை. மிகப்பெரிய செங்கற்கள் 14 அங். x 8 அங். x 4 அங். சராசரி அளவு கொண்டதாகக் காணப்படுகிறது. இக்கற்கள் உலைகளுக்கே பயன்பட்டன.[4]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ The Encyclopedia of Indian Archeology, by A. Ghosh.
- ↑ 2.0 2.1 A. Ghosh (ed.). "Excavations at Alamgirpur". Indian Archaeology, A Review (1958-1959). Delhi: Archaeol. Surv. India. pp. 51–52.
- ↑ "Map". Archived from the original on 2006-06-13. பார்க்கப்பட்ட நாள் 2015-07-29.
- ↑ 4.0 4.1 4.2 India, Archeological Survey of. "India Archeology 1958-59" (PDF). Ed : Amalanada Gosh. Archeological Survey of India. pp. 51–52. பார்க்கப்பட்ட நாள் 3 July 2012.