அலாஸ்கா வளைகுடா
அலாஸ்கா வளைகுடா (Gulf of Alaska) என்னும் கடல்பகுதியானது பசிபிக் பெருங்கடலின் வடக்கே அலாஸ்கா மாநிலத்தின் வளைவான தெற்குக் கரையை ஒட்டி அமைந்துள்ளது. இவ்வளைகுடா மேற்கில் அலாஸ்கா தீபகற்பம் மற்றும் கோடியாக் தீவு முதல் கிழக்கில் அலெக்சாண்டர் ஆர்ச்சிபெலகோ வரைப் பரவியுள்ளது.
இவ்வளைகுடாவின் கடற்கரை நெடுகிலும் அடர்ந்த காடுகள், மலைகள் மற்றும் எண்ணற்ற பனிப்பாறைகளும் விரவிக் காணப்படுகின்றன. அலாஸ்காவின் மாபெரும் பனிப்பாறைகளான மலாசுபினா மற்றும் பேரிங்கு பனிப்பாறைகள் அலாஸ்கா வளைகுடாவின் கடற்கரை முழுதும் பரவியுள்ளன. இந்தக் கடற்கரையானது குக் இன்லெட் மற்றும் பிரின்சு வில்லியம் சவுண்டு ஆகிய இருபெரும் நீரிணைப்புகளால் ஆனதாகும். இது யாகுடாட்டு விரிகுடா மற்றும் கிராசு சவுண்டு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இங்கு அமைந்துள்ள லிட்டுயாவிரிகுடாவானது உலகின் மாபெரும் சுனாமி நிகழ்ந்த பகுதியாகும். மேலும் இது மீன்பிடி படகுகளுக்கான துறைமுகமாகவும் திகழ்கிறது.
சுற்றுச் சூழல் மண்டலம்
தொகுஅலாஸ்கா வளைகுடாவானது கடல் பரந்த புலக் காட்சி உணரி (WiFS) தகவல்களின் அடிப்படையில் முதல்தர உயர் உற்பத்தி சூழல் மண்டலமாக கருதப்படுகிறது[1]. அலாஸ்கா வளைகுடாவில் ஏராளமான ஆழ்கடல் பவளப் பாறைகள் காணப்படுகின்றன.[2] குறிப்பாக இப்பகுதியில் காணப்படும் பவளப் பாறைகள் பிரைம்நோவா பசிபிகா என்றழைக்கப்படுகின்றன. பி.பசிபிகா என்னும் பவளப் பாறை வகையானது பொதுவாக கடலில் 150 மீ (490அடி) முதல் 900 மீ (3000அடி) வரையிலான ஆழத்தில் காணப்படக்கூடிய ஒன்றாகும்.[3]
வானிலை
தொகுஇந்த வளைகுடா மாபெரும் புயல் உற்பத்தி மையமாக விளங்குகிறது. அத்துடன் தெற்கு அலாஸ்காவின் மிகுந்த அளவிளான பனிப் பொழிவிற்கும், தெற்கு ஆர்டிக்கு வட்டத்தில் காணும் பனிச் செறிவிற்கும் இது காரணமாகிறது. பெரும்பாலான புயல்கள் தெற்கு நோக்கி நகர்ந்து பிரிட்டிசு கொலம்பியா, வாசிங்டன், ஓரிகான் மற்றும் தெற்கு கலிபோர்னியா வரை வீசுகின்றன.
எல்லைகள்
தொகுசர்வதேச கடலியல் அமைப்பு அலாஸ்கா வளைகுடாவின் எல்லைகளைப் பின்வருமாறு வரையறுக்கிறது:[4]
- வடக்கில், அலாஸ்கா கடற்கரை.
- தெற்கில், கேப்பு ஸ்பென்சர், தென்கிழக்கு அலாஸ்கா மற்றும் பிரிட்டிசு கொலம்பியாவின் வடக்கு எல்லையிலிருந்து காபுச்சு முனை, பேரிங்கு கடலின் தென்கிழக்கு எல்லை வரை வரையப்பட்டக் கோடு.
- இதைப் போன்று அருகமைந்த அனைத்துத் தீவுகளும் அலாஸ்கா வளைகுடாவில் உள்ளடங்கியன.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் புவியியல் ஆய்வு மற்றும் பெயர் தகவல் அமைப்பின்படி, இவ்வளைகுடாவின் எல்லைகளாக வடக்கில் அலாஸ்கா கடற்கரையும், தெற்கில் கோடியாக்குத் தீவின் தென்முனை வழியாகச் செல்கின்ற கோடும், மேற்கில் டிக்ஸான் நுழைவாயிலும் எல்லைகளாக அமைந்துள்ளன[5].
மேற்கோள்கள்
தொகு- ↑ Hogan, C. Michael (2011). "Gulf of Alaska. Topic ed. P.Saundry. Ed.-in-chief C.J.Cleveland. Encyclopedia of Earth". National council for Science and the Environment. http://www.eoearth.org/article/Gulf_of_Alaska?topic=49523. பார்த்த நாள்: 2013-06-13.
- ↑ Stone Robert P; Shotwell S Kalei. (2007). "State of deep coral ecosystems in the Alaska Region: Gulf of Alaska, Bering Sea and the Aleutian Islands". In: Lumsden SE et al., eds. The State of Deep Coral Ecosystems of the United States. NOAA Technical Memorandum CRCP-3. Silver Spring, MD: 65–108. http://coris.noaa.gov/activities/deepcoral_rpt/Chapter2_Alaska.pdf. பார்த்த நாள்: 2013-06-13.
- ↑ Waller, RG; Stone, RP; Mondragon, J; Clark, CE (2011). "Reproduction of Red Tree Corals in the Southeastern Alaskan Fjords: Implications for Conservation and Population Turnover". In: Pollock NW, ed. Diving for Science 2011. Proceedings of the American Academy of Underwater Sciences 30th Symposium. Dauphin Island, AL: AAUS; 2011.. http://archive.rubicon-foundation.org/10134. பார்த்த நாள்: 2013-06-13.
- ↑ "Limits of Oceans and Seas, 3rd edition" (PDF). International Hydrographic Organization. 1953. Archived from the original (PDF) on 8 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 7 February 2010.
- ↑ U.S. Geological Survey Geographic Names Information System: Gulf of Alaska
வெளி இணைப்புகள்
தொகு