அலினா மோர்ஸ்
அலினா மோர்ஸ் (பிறப்பு மே 2005) அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த ஒரு தொழில்முனைவோர் ஆவார்[1]. இவர் தனது ஜொலி கேண்டி என்ற மிட்டாய் உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். இவரது மிட்டாய் உற்பத்தி நிறுவனம் சர்க்கரை இல்லாத டாபி மிட்டாய், குச்சி மிட்டாய் மற்றும் வன் மிட்டாய் வகைகளையும் உற்பத்தி செய்கிறது. இந்த மிட்டாய் வகைகள் நாட்டில் உள்ள சுமார் 25,000 கடைகள் மூலமாகவும் மற்றும் இணையம் மூலமாகவும் உலகளவில் விற்பனையாகி வருகிறது. 2018 ஆண்டில் மட்டும் சுமார் 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையில் விற்பனையாகி உள்ளது. இவர் அமெரிக்காவின் தொழில்முனைவோர் பத்திரிகையில் வந்த இளவயது தொழில்முனைவோர் ஆவார். மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி மிசெல் ஒபாமா அவர்களால் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு இருமுறை சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். பல மில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் மோர்ஸ் தனது உயர்நிலைப் பள்ளி படிப்பை தொடர்கிறார்.
அலினா மோர்ஸ் | |
---|---|
இரண்டு ஜொலிபப் (ஒரு வகை குச்சி மிட்டாய்) உடன் மோர்ஸ். | |
பிறப்பு | மே 2005 (அகவை 19) மிச்சிகன், அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
பணி | தலைமை நிர்வாக அதிகாரி |
செயற்பாட்டுக் காலம் | 2014– முதல் |
அறியப்படுவது | மிட்டாய் தொழில்முனைவோர் |