அலிமினெட்டி மாதவ ரெட்டி

இந்திய அரசியல்வாதி

அலிமினெட்டி மாதவ ரெட்டி (Alimineti Madhava Reddy; 28 பிப்ரவரி 1949 - 7 மார்ச் 2000) ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். தெலுங்கு தேசம் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, போங்கிர் தொகுதியில் இருந்து ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

அலிமினெட்டி மாதவ ரெட்டி
சட்டமன்ற உறுப்பினர் Member
போங்கிர்
பதவியில்
1985 – 7 மார்ச் 2000
முன்னையவர்கொம்மிடி நரசிம்ம ரெட்டி
பின்னவர்உமா மாதவ ரெட்டி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1949-05-01)1 மே 1949
நல்கொண்டா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் (தற்போதைய தெலங்காணா), இந்தியா
இறப்பு7 மார்ச்சு 2000(2000-03-07) (அகவை 51)
கத்கேசர், ஆந்திரப் பிரதேசம் (தற்போதைய தெலங்காணா), இந்தியா
காரணம் of deathகண்ணி வெடித் தாக்குதல்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
துணைவர்உமா மாதவ ரெட்டி
பிள்ளைகள்1

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

நர்சா ரெட்டிக்கும் லட்சுமம்மாவுக்கும் பிறந்த அலிமினெட்டி மாதவ ரெட்டி இன்றைய தெலங்காணாவில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.[2] இவர் 1974 இல் உசுமானியா பல்கலைக்கழகத்தில் மின் பொறியாளராக பட்டம் பெற்றார். உமாதேவி என்பவரை மணந்தார். இவர்களுக்கு சந்தீப் ரெட்டி என்ற மகன் உள்ளார். உமா தேவியும், சுந்தீப் ரெட்டியும் அரசியல்வாதிகள்.[3]

அரசியல் வாழ்க்கை

தொகு

ரெட்டி 1984 இல் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார்.[2] மேலும் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கு போங்கிர் தொகுதியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985, 1989, 1994 மற்றும் 1999 தேர்தல்களிலும் வெற்றி பெற்றார்.[4]

மாநில அமைச்சரவையில், முதலில் என்.டி.ராமராவ் மற்றும் பின்னர் என். சந்திரபாபு நாயுடுவின் கீழ் பல துறைகளை வகித்தார். என். டி. ராமராவ் அமைச்சரவையில் 9 மாதங்கள் (டிசம்பர் 1994 முதல் ஆகஸ்ட் 1995 வரை) சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார். 1995 முதல் 1999 வரை 4 ஆண்டுகள் உள்துறை அமைச்சராக பணியாற்றினார். முன்னாள் நல்கொண்டா மாவட்டத்தில் இருந்து உள்துறை அமைச்சராகவும்[5] பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சராகவும் (11 அக்டோபர் 1999 முதல் தான் இறக்கும் வரை) பணியாற்றினார்.

தான் உள்துறை அமைச்சராக இருந்தபோது, நக்சலைட்-மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்கு எதிராக வெளிப்படையாகப் பேசினார். ராமராவ் முதலமைச்சராக இருந்தபோது நீக்கிய மக்கள் போர் குழுவின் மீதான தடையை மீண்டும் அமல்படுத்தினார். நக்சலைட்டுகளின் தாக்குதல்கள் அதிகரித்தன. சரணடைய விரும்புவோருக்கு உதவ ரெட்டி தீவிரமாக பிரச்சாரம் செய்தார். அச்சுறுத்தல் குறித்த எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல், பெரும் தாக்குதல்கள் நடைபெறும் இடங்களை இவர் பார்வையிட்டார். இதன் கரணமாக மக்கள் போர் குழுவின் தாக்குதல் பட்டியலில் இடம் பெற்றார்.[4][6]

இறப்பு

தொகு

2000 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி இரவு 11 மணியளவில் காட்கேசர் அருகே நக்சலைட்டுகளின் சட்டவிரோத மக்கள் போர் குழுவால் தூண்டப்பட்ட கண்ணிவெடி வெடித்ததில் ரெட்டி கொல்லப்பட்டார்.[7] ரெட்டியின் பாதுகாப்பில் குறைபாடு இருந்தன. இவரது பாதுகாப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

ரெட்டியின் மனைவி, உமா மாதவ ரெட்டி, அவரது மரணத்திற்குப் பிறகு அரசியலில் நுழைந்தார். போங்கிர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று நாயுடுவின் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றினார்.[7] தெலங்காணாவில் நல்கொண்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சிறீசைலம் இடதுகரை கால்வாய், இவரது மறைவுக்குப் பிறகு அலிமினெட்டி மாதவ ரெட்டி திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. In memory of late Sri A. Madhava Reddy
  2. 2.0 2.1 "Uma Madhav Reddy, son to join TRS today" (in en-IN). தி இந்து. 14 December 2017 இம் மூலத்தில் இருந்து 9 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201109041519/https://www.thehindu.com/news/cities/Hyderabad/uma-madhav-reddy-son-to-join-trs-today/article21616306.ece. 
  3. "Uma Madhava Reddy, son Sandeep join TRS" (in en-IN). தி இந்து. 15 December 2017 இம் மூலத்தில் இருந்து 22 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211122055430/https://www.thehindu.com/news/national/telangana/uma-madhava-reddy-son-sandeep-join-trs/article21666151.ece. 
  4. 4.0 4.1 Menon, Amarnath K. (20 March 2000). "Andhra Pradesh minister killing by militant outfit PWG lays bare government's claim". இந்தியா டுடே (in ஆங்கிலம்). Archived from the original on 10 October 2021. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
  5. "Plum posts for Nalgonda leaders" (in en-IN). தி இந்து. 3 June 2014 இம் மூலத்தில் இருந்து 11 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140711065851/http://www.thehindu.com/news/national/telangana/plum-posts-for-nalgonda-leaders/article6079377.ece. 
  6. S., Nagesh Kumar (24 October 2003). "A blast and its shock". Frontline (in ஆங்கிலம்). Hyderabad. Archived from the original on 27 October 2021. பார்க்கப்பட்ட நாள் 20 January 2022.
  7. 7.0 7.1 "Naidu to induct former minister's widow into cabinet on Monday". Rediff.com. 5 November 2000 இம் மூலத்தில் இருந்து 15 October 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181015204242/http://www.rediff.com/news/2000/nov/05ap.htm. 
  8. "Republic Day celebrated with fervour". The Hindu. 27 January 2009. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/Republic-Day-celebrated-with-fervour/article16360722.ece. பார்த்த நாள்: 8 July 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிமினெட்டி_மாதவ_ரெட்டி&oldid=3920502" இலிருந்து மீள்விக்கப்பட்டது