அலி சலீம்
அலி சலீம் ( உருது : علی his Ali Saleem ), பேகம் நவாசிஷ் அலி எனும் பெயரால் பரவலாக அறியப்படும் இவர் ஒரு பாக்கித்தான் தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர்ஆவார். இவர் 2010 இல் பிக் பாஸ் 4 இல் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் மறைந்த பிரதமர் பெனாசிர் பூட்டோவினைப் போன்று நிகழ்ச்சிகளில் வேடம் தரித்ததின் மூலம் பரவலாக அறியப்பட்டார். பின்னர் ஆஜ் டிவி நிறுவனம், டான் நியூஸ் மற்றும் ஜியோ டிவி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இவர் ஒரு இருபாலினத்தவர் ஆவார்.இவரது தந்தை ஓய்வுபெற்ற பாக்கித்தானிய இரானுவ தளபதி ஆவார். இவரது மனைவி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார்.[1]
அலி சலீம் علی سلیم | |
---|---|
பிறப்பு | 1979 (அகவை 44–45) இச்லாமாபாத், பாக்கித்தான் |
கல்வி | கேடட் கல்லூரி, புரோபல் சர்வதேச பள்ளி |
பணி | நிகழ்ச்சித் தொகுப்பாளர், நகைச்சுவைக் கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 2000 – தற்போது வரை |
அறியப்படுவது | நகைச்சுவை |
உயிரியல் ரீதியாக ஆணாக பிறந்த அலி, சில சமயங்களில் தன்னை ஓரினச்சேர்க்கையாளர், [2] இருபாலர் என்றும் [3] சில சமயங்களில் ஒரு பாலினத்தவர் என்றும் கூறியுள்ளார். [4]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் அலி பெனாசீர்
தொகுஇஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் ரானுவத் தளபதியின் மகனாகப் பிறந்தார். சிறு வயதிலிருந்தே, இவர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்று கற்பனை செய்தார். [5] இவர் தனது பதின்ம வயதிலேயே கலை மன்றத்தில் யாஸ்மீன் இஸ்மாயிலுக்காக ஒரு நாடகத்தில் கலந்து கொண்டார், பர்தா அணிந்து பார்வையாளர்களுக்கு தனது தனிப்பாடலை வழங்கினார். பார்வையாளர்கள் எவ்வாறு ஒரு குழந்தை தன்னைவிட வயதான பெண்ணின் வேடத்தில் நடிக்க செய்ய முடியும் என கேட்டுவருகின்றனர்.அலி தனது ஆரம்பகாலக் கல்வியை அட்டாக்கில் உள்ள ஹசனப்தல் கல்லூரியில் பயின்றார், பின்னர் ஃப்ரோபல் சர்வதேச பள்ளியில் பயின்றார். [5]
பேகம் நவாசிஷ் அலி
தொகுஅவரது தந்தையும் தாயும் விவாகரத்து கோரிய, அந்த சமயத்தில் அலி கராச்சி நகரத்திற்கு வர வேண்டியிருந்தது. அங்கு இவர் அரசியல் நையாண்டி எழுத்தாளரான இம்ரான் அஸ்லமுடன் பணியாற்ற வேண்டியிருந்தது. அங்கு ஜியோ டிவி என தற்போது அழைக்கப்படும் அலைவரிசையினைப் பற்றி இவரிடம் கூறினார். அலி பெனாசீர் போன்று செய்யும் வேடம் தரித்த பதிவுகள் அவரது நண்பர்களிடையே புகழ்பெற்றது. ஹம் சப் உமீத் சே ஹாய் என அழைக்கப்படும் தேர்தல் நகைச்சுவை நையாண்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டார். அலி பெனாசீர் போன்ற வேடத்தில் தொலைக்காட்சியில் முதல் முறையாக நடித்தார். [5]
தொடர்ந்து அதே பணியினை செய்து வந்த பின்னர் இந்த பணி மட்டுமே செய்து வந்தால் தனது வாழ்க்கையில் சிறப்பான நிலையினை அடைய இயலாது என்பதை அலி உணர்ந்தார்.
தொழில்முறை எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான உமர் ஆதில், மருத்துவர் மேடம் நூர் ஜெஹான், அவரின் நெருங்கிய நண்பராக இருந்தார்.இவர் அலிக்கு விவாத நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி அறிவுரை வழங்கினார்.அதன் மூலம் தான் பேகம் நவாசிசு எனும் கதாபாத்திரம் உருவானது.[2]
பேகம் நவாசிஷ் அலியுடன் லேட் நைட்
தொகுபுடவை அணிந்த பெண்ணாக அலி குறுக்கே ஆடை அணிந்து, செல்வாக்கு மிக்க விருந்தினர்களை பேகம் நவாசிஷ் அலியாக லேட் நைட் நிகழ்ச்சியில் ஆத்திரமூட்டும் கேள்விகளைக் கேட்டார். இவர் நேர்காணலுக்கு ஒரு நேரத்தில் இரண்டு விருந்தினர்களை அழைப்பார்.நிகழ்ச்சியின் உரிமைகள் ஆஜ் டிவிக்கு விற்கப்பட்டன, ஒவ்வொரு சனிக்கிழமையும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
தாயுடன் ஏற்பட்ட சொத்து தகராறு
தொகு2011 மே 26 அன்று அலி சலீமின் தாயார் ஃபர்சானா சலீம் தலைநகர காவல்துறையிடம் தனது மகன் தன்னை சித்திரவதை செய்வதாக கூறினார். அலி சலீம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மூக்கு உடைந்து மற்றும் உடலில் மற்ற காயங்களுடன் இருந்தார் .பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். [6] சொத்து தொடர்பாக குடும்பத்திற்குள் சில சர்ச்சைகள் நடந்து வருவதாக அலி ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
சான்றுகள்
தொகு- ↑ Walsh, Declan (17 May 2006). "Pakistan's late night, cross-dressing TV star". San Francisco Chronicle. http://www.sfgate.com/cgi-bin/article.cgi?file=/c/a/2006/05/17/MNG5KIT1E71.DTL.
- ↑ 2.0 2.1 "Pakistan's drag star". The Washington Blade. Archived from the original on 1 May 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-05-07.
- ↑ "Begum Nawazish Ali to Host on Indian TV". TopNews India. பார்க்கப்பட்ட நாள் 2008-05-07.
- ↑ "Saira Khan's Pakistan Adventure". Daily Mirror. Archived from the original on 2007-07-01. பார்க்கப்பட்ட நாள் 2008-05-07.
- ↑ 5.0 5.1 5.2 Rehan, Sohema. "Star-trek: "I get to have the best of both worlds," Ali Saleem". Newsline Pakistan. Archived from the original on 1 April 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-05-07.
- ↑ "Ali Saleem beats up his mom over property disputes". Apna Desi News. Archived from the original on 13 April 2012. பார்க்கப்பட்ட நாள் 2011-05-31.