அலெக்சாந்திரியா நகர சிரில்
அலெக்சாந்திரியா நகரின் புனித சிரில் (கி.பி.376-444), புனித அத்தனாசியுசுக்குப் பின் அலெக்சாந்திரியா நகரத்தின் ஆயரானார். இவரின் பதவி ஏற்பின் போது உரோமைப் பேரரசில் இந்நகரம் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தது. இவரின் எழுத்துகள் 5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தியலில் ஏற்பட்ட சிக்கல்கள் பலவற்றை தீர்க்க உதவியது.
அலெக்சாந்திரியா நகரின் புனித சிரில் | |
---|---|
திருச்சபையின் தூண்; ஆயர், மறைவல்லுநர் | |
பிறப்பு | c. 376 |
இறப்பு | c. 444 |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை கிழக்கு மரபுவழி திருச்சபை ஆங்கிலிக்கம் லூதரனியம் |
திருவிழா | 27 ஜூன் |
சித்தரிக்கப்படும் வகை | நற்செய்திகளோடு ஆயர் உடையில் ஆசீர் வழங்குவது போல |
பாதுகாவல் | அலெக்சாந்திரியா |
கிபி 431இல் கூடிய எபேசு பொதுச்சங்கத்தில் இவர் முக்கிய பங்கு வகித்தார். இச்சங்கமே கிறிஸ்து இறைத் தன்மையும் மனிதத் தன்மையும் கொண்ட ஓரே ஆள் எனவும் மரியா கடவுளும் மனிதருமான இயேசுவைப் பெற்றெடுத்ததால் கடவுளின் தாய் ஆவார் எனவும் அறிக்கையிட்டது. இயேசுவில் கடவுள் என்றும் மனிதர் என்றும் இரு "ஆள்கள்" உண்டு என்னும் நெஸ்தோரியன் என்னும் ஆயரின் கொள்கை கண்டனம் செய்யப்பட்டது. இதன் விளைவாக நெஸ்தோரியன் தனது ஆயர் பதவியை இழந்தார். இச்சங்கத்தில் இவர் ஆற்றிய பணிகளால், கிறித்தவர்களிடையே இவருக்கு திருச்சபையின் தூண் எனவும், திருச்சபைத் தந்தையர்களின் முத்திரை எனவும் பெயர் வழங்கப்படலாயிற்று.
புனித சிரில், திருச்சபைத் தந்தையர்களில் ஒருவராகவும், திருச்சபையின் மறைவல்லுநர்களுல் ஒருவராகவும் கருதப்படுகின்றார்.
இவரின் முன் கோபம், இவரின் எதிரிகள் இவரை சாட காரணமாயிருந்தது. உரோமைப் பேரரசன் இரண்டாம் தியோட்டோசியுஸ், இவரை விவிலியத்தில் வரும் பாரவோன் மன்னனைப்போல தலை கணம் பிடித்தவர் என சாடினான்.[1]
எதிர்-திருத்தந்தை நோவேடியனின் ஆதரவாளர்களையும், யூதர்களையும் அலெக்சாந்திரியா நகரில் இருந்து வெளியேற்றியதில் இவருக்கு பங்கு உண்டு எனவும் கூறுவர். ஆனால் இக்கூற்றுக்கு தகுந்த சான்று இல்லாததால் இதில் வரலாற்று ஆசிரியர்களிடையே ஒத்த கருத்து இல்லை.
மேற்கோள்கள்
தொகு- ↑ Edward Gibbon, Decline and Fall of the Roman Empire, 47
- Artemi, Eirini , « The mystery of the incarnation into dialogues “de incarnatione Unigenitii” and “Quod unus sit Christus” of St. Cyril of Alexandria », Ecclesiastic Faros of Alexandria, ΟΕ (2004), 145-277.
- Artemi, Eirini , « St Cyril of Alexandria and his relations with the ruler Orestes and the philosopher Hypatia », Ecclesiastic Faros of Alexandria, τ. ΟΗ (2007), 7-15.
- Artemi, Eirini , « The one entity of the Word Incarnate. α). Apollinarius' explanation, β)Cyril's explanation », Ecclesiastic Faros of Alexandria, τ. ΟΔ (2003), 293–304.
- Artemi, Eirini , The historical inaccurancies of the film Agora about the murder of Hypatia, Orthodox Press, τεύχ. 1819 (2010), 7.
- Artemi, Eirini , The use of the ancient Greek texts in Cyril's works, Poreia martyrias, 2010, 114-125
- Artemi, Eirini, The rejection of the term Theotokos by Nestorius Constantinople more and his refutation by Cyril of Alexandria, http://independent.academia.edu/EIRINIARTEMINationalandCapodistrianUniversityofAthens/Papers/1721697/The_rejection_of_the_term_Theotokos_by_Nestorius_Constantinople
- Artemi, Eirini, Свт. Кирилл Александрийский и его отношения с епархом Орестом и философом Ипатией,http://independent.academia.edu/EIRINIARTEMINationalandCapodistrianUniversityofAthens/Papers/1757520/_._