அலெப்போ தற்கொலை வாகனத் தாக்குதல் 2017

சிரியா நாட்டின் அலெப்போ நகரில் 15 ஆப்ரல் 2017 அன்று தற்கொலை வாகனத் தாக்குதல் நடத்தப்பட்டது. பேருந்து மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டபோது பொதுமக்கள் 126 பேர் கொல்லப்பட்டனர். இதில் 70 பேர் குழந்தைகளாவர்[2]. சண்டைப்பகுதியில் உள்ள பொதுமக்களை உடன்படிக்கையின்படி பேருந்து மூலம் வெளியேற்றும்போது இத்தாக்குதல் நடத்தப்பட்டது. ரஷிதீன் மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி 15:30 மணிக்கு, காயமடைந்த அகதிகளை வெளியேற்றும் பேருந்தானது சோதனைச் சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது மகிழுந்து ஒன்றைத் தற்கொலை வாகனமாகப் பயன்படுத்தி பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது[3]. இத்தாக்குதல் காரணமாக பொதுமக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னர் 19 ஏப்ரல் 2017 அன்று பலத்த பாதுகாப்பினூடே மீண்டும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியது. தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை இத்தாக்குதல் போர்க் குற்றம் என கண்டனம் தெரிவித்தது[4]. மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்தது. இத்தாக்குதலுக்கு எவரும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் நடத்தப்பட்டப் பகுதி மக்கள் ஆக்கிரமிப்பு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிக்காமல் அரசுக்கு ஆதரவளிப்பவர்களாக இருந்தபடியால் இத்தாக்குதலைக் கிளர்ச்சியாளர்கள் நடத்தியிருக்கலாம் என சிரியாவின் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன[5]. ஆனால் அஹ்ரார்- அல் ஷாம் இதை மறுத்துள்ளது[6], மேலும் எதிர்க்கட்சிகள், சிரியா அரசு கான் ஷேய்குன் இரசாயனத் தாக்குதல் நிகழ்விலிருந்து மக்கள் கவனத்தைத் திசைதிருப்பும் பொருட்டு இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனக் கருத்து தெரிவித்தன[5].

அலெப்போ தற்கொலை வாகனத் தாக்குதல் 2017
இடம்ரஷிதீன் மாவட்டம், மேற்கு அலெப்போ, சிரியா
ஆள்கூறுகள்36°10′10″N 37°03′24″E / 36.16944°N 37.05667°E / 36.16944; 37.05667
நாள்15 ஏப்ரல் 2017
ஆயுதம்வாகன வெடிகுண்டு
இறப்பு(கள்)126+[1]
காயமடைந்தோர்55+
தாக்கியோர்தெரியவில்லை

மேற்கோள்கள்

தொகு
  1. "Syria evacuees bomb attack death toll rises to 112: monitor". AFP. 16 April 2017.
  2. "Dozens killed after bomb explodes near Aleppo evacuation bus convoy". CBC News. 15 April 2017.
  3. "Syria war: Evacuations resume after deadly bombing". BBC News Online. 19 April 2017. பார்க்கப்பட்ட நாள் 19 April 2017.
  4. www.un.org/apps/news/story.asp?NewsID=56575
  5. 5.0 5.1 Sanchez, Raf. "Dozens killed as suicide bomber hits convoy of civilians evacuating besieged Syrian towns". Telegraph. பார்க்கப்பட்ட நாள் 15 April 2017.
  6. "Syria evacuations resume after weekend car bomb kills more than 100". France24. 19 April 2017. பார்க்கப்பட்ட நாள் 19 April 2017.