அலோங் வானூர்தி நிலையம்

அலோங் வானூர்தி நிலையம் (Along Airport)(ஐஏடிஏ: IXVஐசிஏஓ: VEAN) என்பது ஆலோ வானூர்தி நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின்அருணாச்சல பிரதேசத்தில் உள்ள அலோங்கில் அமைந்துள்ளது.

அலோங் வானூர்தி நிலையம் Along Airport

आलोएनजी हवाई अड्डे
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைஇராணுவம்
இயக்குனர்இந்திய வான்படை
சேவை புரிவதுஅலோங், அருணாச்சலப் பிரதேசம்
உயரம் AMSL274 m / 900 ft
ஆள்கூறுகள்28°10′31″N 094°48′07″E / 28.17528°N 94.80194°E / 28.17528; 94.80194
நிலப்படம்
IXV is located in அருணாசலப் பிரதேசம்
IXV
IXV
IXV is located in இந்தியா
IXV
IXV
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
05/23 1,120 3,675 அஸ்பால்ட்

அருணாச்சல பிரதேச அரசு ஜூன் 2009இல் இந்த வான்வழிப் பாதையைப் பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒப்படைத்தது.[1] விமான நிலையத்தின் ஒரு பகுதியை பொதுப் போக்குவரத்திற்குப் பயன்படுத்த அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.[2]

பாதுகாப்பான விமான நடவடிக்கைகளுக்காக விமானநிலையத்தினைச் சுற்றியுள்ள தடைகளை நீக்குவதற்காக இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) 2011 ஜூலையில் மாநில அரசுக்கும் இந்திய விமானப்படைக்கும் ஒரு அறிக்கையை அனுப்பியிருந்ததுடன், வளர்ச்சிக்கு ஏழு ஏக்கர் நிலம் தேவை என்பதையும் மேற்கோளிட்டிருந்தது.[3]

சம்பவங்கள் தொகு

ஏப்ரல் 7, 1964 இல், கலிங்கா ஏர்லைன்ஸ் டகோட்டா ஓடுபாதையை விட்டு விலகியதால் தீப்பிடித்தது. பொருளாதாரரீதியாகப் பழுதுபார்க்க முடியாத அளவுக்கு விமானம் சேதமடைந்த போதிலும், உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "IAF plane with 13 lost in Arunachal, crash feared". இந்தியன் எக்சுபிரசு. 10 June 2009. http://archive.indianexpress.com/news/iaf-plane-with-13-lost-in-arunachal-crash-feared/474077/. 
  2. "Govt considering setting up of 3 greenfield airports in NE". The Hindu Businessline. 13 August 2014. http://www.thehindubusinessline.com/industry-and-economy/logistics/govt-considering-setting-up-of-3-greenfield-airports-in-ne/article6312413.ece. 
  3. "Greenfield Airport draft masterplan ready: Minister". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 7 September 2012. http://timesofindia.indiatimes.com/city/guwahati/Greenfield-Airport-draft-masterplan-ready-Minister/articleshow/16297204.cms. 
  4. "ASN Aircraft accident Douglas C-47A-10-DK VT-CMD Along". Aviation-safety.net. Archived from the original on 21 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 9 February 2012.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலோங்_வானூர்தி_நிலையம்&oldid=3615552" இலிருந்து மீள்விக்கப்பட்டது