அல்டெரைட்டு
ஆக்சலேட்டுக் கனிமம்
அல்டெரைட்டு (Alterite) என்பது Zn2Fe3+4(SO4)4(C2O4)2(OH)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பன்னாட்டு கனிமவியல் சங்கம் Atr என்ற குறியீட்டால் இக்கனிமத்தை அடையாளப்படுத்துகிறது.[1]) மஞ்சள் கலந்த பசுமை நிறத்தில் அல்டெரைட்டு காணப்படுகிறது. அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலுள்ள கோகோனினோ மாகாணத்தில் இக்கனிமம் முதன்முதலில் கண்டறியப்பட்டது.[2] கனிமமயமாக்கப்பட்ட படிவுகளில் இக்கனிமம் பிரத்தியேகமாக காணப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Warr, L.N. (2021). "IMA-CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A.
- ↑ Alterite பரணிடப்பட்டது 2019-04-14 at the வந்தவழி இயந்திரம் on mindat.org